free website hit counter

உச்சகட்டத்தை எட்டிய மனிப்பூர் வன்முறை - போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலைமை பதற்றமாகவே உள்ளது.

பழங்குடியினர் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மொபைல்-இன்டர்நெட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களால், மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அம்மாநில கவர்னர் அதிரடி உத்தரவை எடுத்துள்ளார்.

கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction