free website hit counter

சூரிய மின் உற்பத்​தியில் இந்தியா3ஆம்​ இடத்​துக்​கு முன்னேறியது

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதுடெல்லி: காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்​தியில்,  இந்தியா 3ஆம்​ இடத்​துக்​கு முன்னேறியது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் அதன் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

புவி வெப்பமடைந்தல், சுற்றுச்சூழல் மாசு அடைந்தல், அதனால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியை உலக நாடுகள் ஏற்று செயல்படுத்தி வருகின்றன. பரந்து விரிந்த பரப்பளவு உள்ள இந்தியாவில், நீர் மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

எனினும், சுற்றுச்சூழல் மாசு அடைவதில் இவை, கனிசமாக பங்கு வகிக்கின்றன. 

 

இதற்கு தீர்வாக காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியை இந்திய அரசு ஊக்குவித்து, அதற்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் பயனாக, இந்தியா இத்துறையில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. 

 

இது தொடர்பாக, பிரிட்​​டனை சேர்ந்​த சுற்​றுச்​​சூழல் அமைப்​​பான எம்​​பர், ஆய்​வு நடத்​தி விரி​வான அறிக்​​கையை வெளி​யிட்​டுள்ளது. எம்​​பர் அமைப்​​பின் அண்மை ஆய்​​வறிக்​கை கூறியிருப்பதாவது: 

 

உலகளவில், 215 நாடு​களின் மின் உற்​பத்​தி குறித்​து ஆய்வு செய்தோம். கடந்​த ஆண்​டு, சர்​வ​தேச அளவி​லான மின் உற்​பத்​​தி​யில் 41 சதவீத மின்​சா​ரம்​ அணு சக்​தி மற்​றும்​ புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி முறை​களில் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது. இதில், சர்​வ​தேச அளவில் நீர்​மின் நிலை​யங்​​கள் மூலம்​ 14%, அணு சக்​தி மூலம்​ 9%, காற்​றாலைகள் மூலம்​ 8%, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள் மூலம்​ 7%, இதர புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி மூலம்​ 3% மின் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது.

 

மின்​சா​ரத்​தை அதிகம் பயன்​படுத்​​தும்​ நாடு​களில் சீனா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்​​கா, ஐரோப்​​பிய ஒன்​றி​யம்​, இந்​​தி​யா, ரஷ்​யா, ஜப்​​பான், பிரேசில் நாடு​கள் அடுத்​​தடுத்​த இடங்​​களில் உள்​ளன. சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய மின் உற்​பத்​​தி​யில் சீனா முதலிடத்​​தில் இருக்​​கிறது. சீனா​வின் மொத்​த உற்​பத்​​தி​யில் 82 சதவீத மின்​சா​ரம்​, காற்​றாலை, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள், நீர் மின் நிலை​யங்​​கள், அணுமின் நிலை​யங்​​கள் மூலம்​ உற்​பத்​தி செய்​​யப்​​படு​கின்​றன. 

 

இந்​​தி​யா​வின் சூரிய மின் உற்​பத்​​தி, காற்​றாலை மின் உற்​பத்​தி கடந்​த 5 ஆண்​​டு​களில் இரு​மடங்​​காக அதி​கரித்​​துள்​ளது. சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய சக்​தி மின் உற்​பத்​​தி​யில் ஜெர்​மனியை பின்​னுக்​கு தள்ளி 3-ம்​ இடத்​​துக்​கு இந்தியா முன்​னேறி உள்​ளது. இந்​​தி​யா​வின் மொத்​த மின் உற்​பத்​​தி​யில் 78% நிலக்​​கரி உள்​ளிட்​ட புதைபடிமங்​​களில் இருந்​து உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது. இவ்​வாறு, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula