இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின் படி தற்போது யாஸ் புயல் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் வங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதில் யாஸ் புயல் வேகமெடுத்தது. இப்புயலானது அதி தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
இதனையடுத்து கரையை கடக்கத்தொடங்கிய பகுதியாக இந்தியாவில் ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகத்தின் வடபகுதி இருந்தமையால் நேற்று காலை பலத்த சூறாவளி வீசியது.
பலத்தமழையும், கடல் கொந்தளிப்பும் கடலோர மாவட்டங்களை பெறும் பாதிப்புக்குள்ளாக்கியது. பாலசோர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்கள் நீரில் முழ்கின. அப்பகுதிகளை சேர்ந்த மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
யாஸ் புயல் மதியத்திற்கு மேல் கரையை கடந்து முடித்திருந்த போதிலும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம்ற ஆகிய இரு மாநிலங்களிலும் 11 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் 113 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதந்தொடர்பாக மேலதிக செய்திகளில் யாஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகர்வதாகவும் அது அடுத்தாக ஜார்கண்ட் மாநிலத்தை கடந்து வருவதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.