வங்க கடலில் உருவாகியுள்ள புதிய குலாப் புயல் இன்று மாலை ஒடிசா மாநிலம் வழியாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனையடுத்து அது வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குலாப் என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் இன்று மாலை மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளை கலிங்கப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கடக்க வாய்ப்புள்ளது
வடமேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயல் செப்டம்பர் 26 நள்ளிரவில் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 85 கி.மீ வேகத்தில் புயல் கரையைக்கடக்கும் போது காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பும் இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.