இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என
குறிப்பிட்டுள்ளார்.
மாநில உரிமை - மொழியுரிமை - தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனவும் ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை - தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளார்.