சுவிற்சர்லாந்து குடியுரிமை உலகில் மிகவும் விரும்பத்தக்கது எனவும், முதலிடத்தில் உள்ளதாகவும், புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. CS குளோபல் பார்ட்னர்ஸ் நடத்திய ஆய்வின்படி, புதிதாக வெளியிடப்பட்ட உலக குடியுரிமை அறிக்கை (WCR) ல் 88.1 புள்ளி பெற்று சுவிற்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
அதில் “ உலகளாவிய ரீதியில் குறிப்பாக கோவிட்க்கு பிந்தைய உலகில், குடிமக்களுக்கு எந்தெந்த நாடுகள் அதிக நன்மைகளை வழங்குகின்றன,மற்றும் அதற்கான வழிகள் உள்ளன. என்பதை ஆராய்ந்த வகையில், சுவிற்சர்லாந்து அதிக வாய்ப்புகள் மற்றும் சிறந்த பாதுகாப்பைத் தருகிறது " என CS குளோபல் பார்ட்னர்ஸின் CEO மிச்சா எம்மெட்டின் கூறியுள்ளார்.
சுவிற்சர்லாந்தின் கோவிட் தொடர்பான புதிய நடவடிக்கைகள் !
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, வணிக சூழல், வாழ்க்கைத் தரம், பயணம் மற்றும் நிதி சுதந்திரம் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில், சுவிற்சர்லாந்து இதுவரையில் முன்னிலையில் இருந்த டென்மார்க்கை விட முன்னேறியுள்ளது. டென்மார்க் இப்போது இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து நார்வே, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் கூட்டு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சுவிற்சர்லாந்தில் அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டும் !
ஜப்பான் 6வது இடத்திலும், ஜேர்மனியும் சிங்கப்பூரும் 7வது இடத்திலும், இங்கிலாந்து 12வது இடத்திலும், பிரான்ஸ் 16வது இடத்திலும், அமெரிக்கா 20 வது இடத்திலும் உள்ளன.