free website hit counter

சுவிற்சர்லாந்தில் ஓமிக்ரான் ஒரு உள்ளூர் வைரஸாக மாறுகிறது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் மற்றும் பல தொற்று நோய் நிபுணர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டை "இன்டெமிக்" என்று குறிப்பிடுகின்றனர்.

இதன் பொருள் என்ன? எனும் கேள்விக்கு, " ஒரு உள்ளூர் வைரஸ் தொடர்ந்து மக்கள்தொகையில், ஏற்ற தாழ்வுகளுடன் பரவுவதைப்போல ஒமிக்ரானும் பரவும் பண்பினைக் கொண்டிருக்கிறது. ", என்று பெர்ன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியன் ரியோ தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், " உதாரணமாக, சாதாரண காய்ச்சல் ஒரு உள்ளூர் வைரஸ், இது ஒவ்வொரு குளிர்காலத்திலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வலுவாக வரும். வெப்பநிலை, மக்களிடையே உள்ள தொடர்புகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பாக மக்கள்தொகையின் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற காரணிகளினால் அதன் தொற்று வீதம் மாறுபடும். இப்போது ஒமிக்கரானும் இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது. இதன் காரணமாக, தற்போதைய பெருந்தொற்றுநோயைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு மாறுதல் கட்டத்தில் அதன் முடிவை நோக்கிச் செல்கிறோம் என்று நினைக்கிறோம்" என்று கூறினார்.

சுவிஸ் அரசாங்கம் கோவிட் -19 தொற்றுநோயின் நிலையைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது, வழக்கமான செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில், சுவிஸ் பொது சுகாதார FOPH அலுவலகத்தின் தடுப்பூசி மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவரான விர்ஜினி மஸ்ஸேரி, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக பத்திரிகைகளிடம் கூறினார்.

சுவிட்சர்லாந்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும், தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படுவதும் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே உள்ளது. "நாங்கள் உச்சத்தை அடைந்துவிட்டோம்" என்று மஸ்ஸேரி செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் தேவையை குறைப்பது மற்றும் கோவிட் சான்றிதழின் செல்லுபடியை குறைப்பது உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் தற்போது மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula