ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டப்பூர்வமாக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு தழுவிய இந்த வாக்கெடுப்பில் 64.1 சதவீத வாக்காளர்கள் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து சுவிட்சர்லாந்து ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலாக 2001ஆம் ஆண்டு நெதர்லாந்து ஏற்றுக்கொண்டது. சுவிட்சர்லாந்து ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக்கொண்ட உலகின் 30 வது நாடு என்பது குறிப்பிடதக்கது.