இத்தாலிக்குப் பயணம் செய்பவர்களுக்கு, இந்தியத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியினை அங்கீகரித்தது இத்தாலியின் சுகாதார அமைச்சு. இது இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவுள்ளது.
ஐரோப்பியநாடுகளுக்கு, இந்தியா மற்றும் கனடா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, அவர்களது நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக ஏற்பட்ட பயண நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியின, இத்தாலியின் சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது.
இத்தாலி ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) - அஸ்ட்ராஜெனெகா (Vaxzevria), Pfizer/BioNTech (Comirnaty), Moderna (Spikevax), Johnson & Johnson (Janssen) ஆகியவற்றை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக இதுவரை அங்கீகரித்தது. நாட்டிற்குள் நுழையும் பயணிகள், இந்த நான்கு தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்டிருந்தாலே, தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்பட்டது.
இத்தாலிய சுகாதார அமைச்சகம் கடந்த செப்டம்பர் 23 ந் திகதி வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், தற்போது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் பின்வரும் கோவிட் -19 தடுப்பூசிகளின் சமத்துவத்தை அங்கீகரிப்பதாகத் தெரிவித்தது. இதனடிப்படையில், கோவிஷீல்ட் (சீரம் நிறுவனம்), ஆர்-கோவிட் (ஆர்-பார்ம்), கோவிட் -19 தடுப்பூசி மறுசீரமைப்பு (ஃபியோக்ரூஸ்) என்பவற்றை இத்தாலியும் அங்கீகரித்துள்ளது என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இத்தாலியும் தற்போது இதனை அங்கீகரித்துள்ளது.
இதனடிப்படையில் வெளிநாட்டு தேசிய சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்கள், EMA ஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட சமமான தடுப்பூசிகளாக, இருக்கும் பட்சத்தில், அவை கோவிட் -19 பசுமைச் சான்றிதழுக்கு சமமானதாக அல்லது அதனைப் பெறுவதற்குப் போதுமானதாக உள்ளதாகக் கருதப்படுகிறது