தனது அனைத்து விமானப் பணியாளர்களும் நவம்பர் 15 ம் திகதிக்குள் கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுவிஸ் தேசிய விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
தற்போது தடுப்பூசி போடப்படாத அனைத்து "பறக்கும் பணியாளர்களும்" பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அறிவித்துள்ளது.
"தடுப்பூசிகள் பற்றி முடிவுகளை எடுக்க அதிக நேரம் தேவைப்படும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்பை தற்காலிகமாக நிறுத்துவதற்கான விருப்பம் உள்ளது. ஆறு மாத காலத்திற்குள் அவர்கள் தடுப்பூசி போட்டபின் வேலைக்குத் திரும்பலாம், ஆனால் தடுப்பூசி போட மறுக்கும் எவரும் ஜனவரி இறுதியில் "கடமை மீறல்" காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்" " என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.