free website hit counter

சுவிற்சர்லாந்தின் A-13 நெடுஞ்சாலை San Bernardino சுரங்கப் பாதையில் விபத்து!

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் A-13 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள San Bernardino குகைக்குள் நடந்த மோட்டார் கார் விபத்தில், இருவர் படுகாயமுற்றனர்.

சுவிற்சர்லாந்தின் நெடுஞ்சாலைகளிலுள்ள நீண்டதூரக் குகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 8 கிலோ.மீற்றருக்கும் அதிகமான நீளத்தினைக் கொண்ட இக் குகைப்பாதை போக்குவரத்துடத்தில் முக்கியமானதாகும். 

இந்தக் குகைக்குள் இன்று பகல் 12.45 மணியளவில் நடைபெற்ற  இந்த விபத்தில் சிக்கியவர்களை,  தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும்,  விரைந்து மீட்டு, றேகா உலங்கு வானூர்த்தி மூலம் கிறபுண்டன் மாநில மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக, 4 மணிநேரத்துக்கும் மேலாக இந்தப் பாதை முற்றாக மூடப்பட்டிருந்தது.

கடந்த இரு தினங்களாக  இந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவும் இடம்பெறுவதனாலும், இச்சாலைப் போக்குவரத்து பெரும் சிரமத்துக்குள்ளானகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction