சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக, தற்போது நடைமுறையில் பாதுகாப்பு உள்ள நடவடிக்கைகள் தொடரும் என நேற்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்தது.
அரசு ஏற்கனவே தொற்று நோய் நடவடிக்கை தளர்வுகளின் "இயல்பாக்குதல் கட்டம்" உடனடியாகச் சாத்தியமில்லை. தடுப்பூசி போடுவதற்கான மக்களின் விருப்பத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தால் மட்டுமே இந்த இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வரும் அக்டோபர் 1 முதல், வைரஸ் தொற்று அறிகுறியற்ற மக்கள் தொற்றுச் சோதனை செய்வதற்கு, பணம் செலுத்த வேண்டும் என அரசு நேற்று அறிவித்துள்ளது. அதேபோல் மாதத்திற்கு ஐந்து சுய சோதனைகளுக்கான வசதிகளும் கிடைக்காது. தொற்று அறிகுறியுடைய நோயாளிகளுக்கும் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் சோதனைகளுக்குமான செலவை கூட்டமைப்பு இன்னும் ஏற்றுக் கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்தார்.
தற்போதைய கோவிட் கட்டுப்பாடுகளில் நிலைமையை மாற்றாமல் மருத்துவமனைகளைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாக வைத்து மேலும் அவற்றை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. தற்போது தடுப்பூசி போட விரும்புபவர்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது தடுப்பூசி போடுவதற்கான விருப்பத்தின் பாரிய அதிகரிப்பைப் பொறுத்தது என கூட்டாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை தொடக்கத்தில் இருந்து தொற்றுநோய்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகள் அதிகரிப்பது இப்போது தவிர்க்க முடியாதது. ஆதலினால் இன்னும் உறுதியான முடிவுகள் எதுவும் இல்லை. இந்த ஏற்பாடுகள் ஆலோசனையில் வைக்கப்பட்டு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் 25 அன்று எடுக்கப்படும். அடுத்த செப்டம்பர் 1 ம் திகதி அமர்வில் புதிய தளர்வு மதிப்பீடு செய்யப்படும் எனவும், விடுமுறை நாட்களில் திரும்புவதன் விளைவுகள் மிகவும் எளிதாகக் கவனிக்கப்படும் எனவும், மற்றும் சுகாதார வசதிகளில் அழுத்தம் குறைக்கப்பட்டால் மட்டுமே தளர்வுகள் ஏற்படும்.