free website hit counter

இத்தாலியில் கட்டாயமாகிய "கிரீன் பாஸ்" - போலி ஆவணங்கள் குறித்து காவல்துறை எச்சரிக்கை !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியின் பல கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கோவிட் 'கிரீன் பாஸ்' தேவை கட்டாயமாக்கப்பட்டதன் பின்னதாக, இதன் போலி பதிப்புகள் நாடு முழுவதிலும் பரவி வருவதாக இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வகையிலான சுகாதார நிலை குறித்த தவறான ஆதாரங்களை விற்கும் நெட்வொர்க்கை உடைத்துவிட்டதாகவும், நடந்து வரும் விசாரணையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

"ஆயிரக்கணக்கான பயனர்கள் நன்கு அறியப்பட்ட தகவல்தொடர்பு தளங்களில் பதிவு செய்யப்பட்டு, 150 முதல் 500 யூரோ வரை அறவிடப்பட்டு, இணையவழியில் இந்தப் போலிப் பாஸ்கள் விநியோகிக்ககப்பட்டிருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது.

இத்தாலியில், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உட்புற விளையாட்டு அரங்குகள் அல்லது உணவகங்களில் உட்புற சாப்பாட்டுக்கு நுழைவதற்கு கிரீன் பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த
நடைமுறை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு நீண்ட தூர ரயில்கள் மற்றும் பேருந்துகளிலும் தேவைப்படும் எனவும், மேலும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையின் ஊடக அறிக்கையின்படி, கோவிட் ஹெல்த் பாஸை தவறாகக் கண்டறிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். விதிகளை பின்பற்றத் தவறினால் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் இரண்டிற்கும் € 400 முதல் € 1,000 வரை அபராதம் விதிக்க முடியும். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் உடல்நலப் பாஸை மீண்டும் மீண்டும் பார்க்கத் தவறும் வணிகங்கள் பத்து நாட்கள் வரை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction