சுவிற்சர்லாந்தில், இன்று முதல், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் கலாச்சார கூடல்கள் மற்றும் தனியார் விருந்துபசாரங்களின் உட்புறப் பகுதிகளில் நுழைய முடியாது.
திரையரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள், பாடகர்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற தனியார் நிகழ்வுகளுக்குமான இந்த உத்தரவு, இம்மாதம் 8ம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள், மற்றும் குறிப்பாக மருத்துவமனையில் அதிகளவிலானோர் சேர்க்கப்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த விதிமுறைகளை மீறி யாராவது பிடிபட்டால் அவர்களுக்கு 100 பிராங்க் வரையில் அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று இந்த நடைமுறைகளை கவனப்படுத்தும் பொறுப்பு, நிறுவனப் பொறுப்பாளர்களுக்கானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள், எதிர்வரும் 2022 ம் ஆண்டு ஜனவரி 24ந் திகதி வரைக்கும் இருக்குமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தொற்று நிலைமை கட்டுப்பாட்டினுள் இருந்தால் இந்தக் கால நிர்ணயம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பில் சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆயினும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட சுவிற்சர்லாந்தில், கோவிட் விதிகள் மெத்தனமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.