இத்தாலியில் ஏற்கனவே 'ஹன்னிபால்' என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க, துனிசியா மற்றும் அல்ஜீரியா பகுதிகளில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஒரு அசாதாரண வெப்ப அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த வாரத்தில் தீபகற்பத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை பருவகால சராசரியை விட அதிகமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சமீபத்திய கணிப்புகளிலிருந்து ஆராயும்போது, மோசமான நிலை இன்னும் வரவில்லை என்று தெரிகிறது. ஆயினும் இத்தாலியில் வெப்பநிலை 40 C க்கு மேலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலிய வானிலை அவதான நிலையத்தின் இணையதளத் தரவுகளின்படி, இத்தாலிய மொழியில் 'அஃபா' என அழைக்கப்படும் ஒட்டும் வெப்ப அலையானது, ஜூன் 21 ஆம் திகதி கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே உயர் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.