இத்தாலியில் குரங்கு அம்மைத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக அறியவருகிறது. தலைநகர் ரோமில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் ஐந்தாகவும், டஸ்கன் மற்றும் லோம்பார்டியா பகுதிகளில் தலா ஒவ்வொரு தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாலியில் குரங்கு அம்மையின் முதல் தொற்று, சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கண்டறியப்பட்ட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது ஏழாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அனைத்து ஐரோப்பாவிலும் குறைந்தது 16 நாடுகளில் 250 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மைத் தொற்றுககள் பதிவாகியுள்ளன.பெரும்பாலும் ஸ்பெயின், பிர்த்தானியா, போர்த்துக்கல், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தொற்றுக்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.