free website hit counter

சுவிற்சர்லாந்தில் விமான டிக்கெட் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்முறை கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கவலைத் தரக்கூடியதாக இருக்கிறது விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டு விலை அதிகரிப்பு.

சுவிற்சர்லாந்தின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலிருந்தும், சூரிச், ஜெனிவா மற்றும் பாஸல் - புறப்படும் விமானங்களின் பயணச்சீட்டு விலை மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின் படி, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயர்வுக்கு காரணமான காரணிகளில் எரிபொருள்விலை அதிகம் என்பது முக்கிய காரணமாயினும், அனைத்து விமான நிறுவனங்களும் பெரிய திறன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, நிறுவனங்களிடம் விமானங்கள் மற்றும் பணியாளர்கள் குறைவாக உள்ளனர் என்பதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction