சுவிற்சர்லாந்தில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் பொதுவாக பொருளாதார நிலைகளைப் பாதிப்பதனால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் (KOF) சமீபத்திய கணக்கெடுப்பு, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் மார்ச் 2022 இல் முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இருந்ததை விட 2.4 அதிகம் செலவீனங்களை கண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. பணவீக்க விகிதமும் 2008 க்குப் பிறகு மிக அதிகமாக உள்ளதாகவும், இதுவும் விலை அதிகரிப்பதை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிடப்ட்டுள்ளது.
இதேவேளை ஊதியங்கள் செலவினங்களுக்கேற்ப வளர்ச்சியடையவில்லை எனவும், அடுத்த 12 மாதங்களுக்கு 1.6 சதவிகிதம் மட்டுமே ஊதியத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் KOF கணிப்பீடுகள் கண்டறிந்துள்ளன.