free website hit counter

சுவிற்சர்லாந்தில் எதிர்பார்த்ததை விட அதிக தொற்றுக்கள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் பண்டிகைக் காலத்தின் பின்னதாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளது.

"ஐரோப்பாவில் நாங்கள் மிகவும் மோசமான தொற்றியல் நிலையில் உள்ளோம்" என, கிறிஸ்துமஸ் காலத்திற்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்த கூட்டமைப்பு வல்லுநர்கள் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்றுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

இப்போதைக்கு, மருத்துவமனைகள் எதிர்கொள்கின்றன, ஆனால் இதன் தொடர்நிலை அச்சம் தருகிறது. நீண்ட புத்தாண்டு வார இறுதியில் 57,000 க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இப்போது தெளிவாக அறியமுடிகிறது. இன்று மேலும் 20,742 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், இந்நிலை மேலும் இறுக்கமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொற்றுகள் எண்ணிக்கை அதிகாரிகளைத் தயங்க வைக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

FOPH இன் நெருக்கடி மேலாண்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் தலைவரான பேட்ரிக் மேதிஸ், தேசிய கோவிட் பணியின் துணைத் தலைவர் சாமியா ஹர்ஸ்ட், மாநில மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ருடால்ஃப் ஹவுரி ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இப்போது மேலாதிக்கம் செலுத்துவது ஓமிக்ரோன் மாறுபாடு என்னும் தொற்றுநோய் தொடர்பான முக்கியத் தரவை பேட்ரிக் மேதிஸ் மதிப்பாய்வு செய்தார். முதல் முறையாக ஒரே நாளில் 20,000 க்கும் அதிகமான தொற்றுக்கள். மருத்துவமனையில் சேர்க்கப்படுவது தொடர்பான எண்ணிக்கை குறைந்து வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் கூட, நிலைமை நிலையாக உள்ளது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்று கருதலாம் என்று மேதிஸ் எச்சரித்தார்.

குழந்தை மனநல மருத்துவத்தில் நிபுணரான அலைன் டி காலோ பேசுகையில், இன்னும் தடுப்பூசி போடாததால், குழந்தைகள் ஓமிக்ரான் அலையால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்,'என எச்சரித்தார். "இப்போது விடுமுறை முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதால், தெரியாதவர்களுக்கு பஞ்சம் இருக்காது .ஆனால் பள்ளிகளை மூடுவதை நாம் தவிர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அவர் முலம் பேசுகையில், வாரத்திற்கு மூன்று முறை சோதனை செய்வதுடன், பள்ளிகளில் சில நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று டி காலோ மீண்டும் வலியுறுத்தினார். வளாகத்தை முறையாக காற்றோட்டம் செய்யுங்கள், முகமூடியை அணியுங்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது பயன்படுத்தப்பட வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் விரைவில் மீண்டும் உயரும், எனவே மருத்துவமனைகளின் அதிக சுமை தவிர்க்க முடியாது. ஆயினும் இறுதியில், நோய்த்தொற்றுகள் அதிகரித்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைந்தால் அது நல்ல செய்தி அல்லவா? எனக் கூறினார் பேட்ரிக் மேதிஸ்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula