சுவிற்சர்லாந்தின் கோவிட் -19 ஹெல்த் பாஸ் விதிகளில் மாற்றத்தை சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய கூட்டாட்சி அலுவலகத்தைச் சேர்ந்த வர்ஜீனி மஸ்ஸேரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, இரண்டாவது தடுப்பூசி போட்டவர்கள், போட்டதன் பின்னதாக, 12 மாத காலத்திற்கு கோவிட் -19 நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கருதப்படுவார்கள். முன்னதாக, தடுப்பூசி போட்ட நபர்களுக்கான ஹெல்த் பாஸின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் சுவிற்சர்லாந்தில் முதன்முதலாகத் தடுப்பூசி போடப்பட்ட முதல் நபர்களில் சிலர் உத்தியோகபூர்வ நோய் எதிர்ப்பு சக்தி அட்டை திட்டத்தின் கீழ் சான்றிதழ் வெளியிடும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காலம் காலாவதியாகிவிடும் நிலை இருந்தது.
இந்த மாற்றம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், நோயிலிருந்து மீண்டவர்களுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கருதப்படும். தடுப்பூசிகளால் வழங்கப்படும் கோவிட் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் காலப்பகுதியைக் கணிப்பதில் வல்லுநர்கள் வேறுபடுகிறார்கள். இருப்பினும் சுவிஸ் அரசாங்கம் தடுப்பூசிகள் குறைந்தது 12 மாதங்களுக்கு பாதுகாப்பை அளிப்பதாகத் தெரிவிக்கின்றது
இந்த அறிவிப்பு தொடர்பிலான முறையான மாற்றங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும்.