free website hit counter

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயண விதிகள் பெப்ரவரி 1ல் எளிதாகின்றன !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், கோவிட் சான்றிதழ்களுடன் பயணிக்கும் வகையில் விதிகளை எளிதாக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இதனால் ஒன்றியத்தின் கோவிட்-19 சான்றிதழைக் கொண்ட எவரும் சோதனைகள் அல்லது தனிமைப்படுத்தல் போன்ற எந்தக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளாமல், ஒன்றியத்திற்குள் பயணிப்பதை EU நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், உறுப்பு நாடுகளிடம் விவாததித்து ஒரு புதிய பரிந்துரையை ஒப்புக் கொண்டுள்ளது. தடுப்பூசி, மீட்பு அல்லது எதிர்மறையான சோதனையை நிரூபிக்கும் EU கோவிட் சான்றிதழைக் கொண்டவர்கள், அதிக சோதனைகள் அல்லது தனிமைப்படுத்தல் தேவையில்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஷெங்கன் மண்டலத்திற்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள், அவர்கள் கோவிட் தொற்று விகிதம் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து வந்திருந்தாலும் கூட இந்த நடைமுறை பொருந்தும்.

டென்மார்க் பெப்ரவரி 1ல் கோவிட்-19 கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாம் !

ஆனால் இந்த ஒப்புதல், பயணங்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இப்போது பார்கள் போன்ற இடங்களை அணுகுவதற்கு தேவைப்படும் உள்நாட்டு ஆரோக்கியம் அல்லது தடுப்பூசி பாஸ்கள் நடைமுறையில் உள்ளன. அவ்வாறான நடைமுறைகளை இந்த ஒப்புதல் நிராகரிக்காது.

இந்த பரிந்துரை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது, ஆனால் இது கட்டுப்பாடற்றது. எனவே தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கட்டுப்பாடுகள் தமது நாட்டிற்குத் தேவை என உணர்ந்தால் அவர்கள் விரும்பும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

சுவிற்சர்லாந்தில் புதிய Omicron துணை மாறுபாடு !

பிப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகளின்படி, பயணிகள் அதிகபட்சமாக 270 நாட்களுக்கு முன்பு (தோராயமாக ஒன்பது மாதங்கள்) தடுப்பூசி போட்டிருந்தால் அல்லது பூஸ்டர் ஷாட்டைப் பெற்றிருந்தால், அவர்கள் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு சுதந்திரமாக பயணம் செய்ய முடியும்.

கடந்த 180 நாட்களில் கோவிட் நோயிலிருந்து மீண்டவர்களும், வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் PCR பரிசோதனை செய்து கொண்டவர்கள் அல்லது 24 மணி நேரத்திற்கு முன் ஆன்டிஜென் பரிசோதனை செய்த பயணிகளும் கூடுதல் சோதனை தேவைகள் அல்லது தனிமைப்படுத்தல் தேவை இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்படுள்ளது.

இத்தாலியின் அடுத்த ஜனாதிபதி யார் ?

EU கோவிட் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் கூடுதல் சோதனைத் தேவைகளை எதிர்கொள்ள நேரிடும், இருப்பினும் அத்தியாவசியத் தொழிலாளர்கள், எல்லை தாண்டிய பயணிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் EU பரிந்துரைக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula