free website hit counter

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரதிதாசன் கவிதைகளைத் தழுவி பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள‘மூப்பில்லா தமிழே தாயே’ என்கிற தமிழ் மொழி போற்றும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, தயாரித்துள்ளார்.

இப்பாடல் தமிழ் மற்றும் உலகலாவியத் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளில் கோலோச்சும் தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்பாடல் வரும் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை திருநாள் நாளாகக் கொண்டாடும் வகையில் ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாகக் கருதப்படுகிறது. இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

"இது அனைத்து தலைமுறையினரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கீதத்தைப் பற்றி துபாய் எக்ஸ்போவில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தது நினைவு கூறத் தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!’- என்கிற பாரதிதாசனின் வரிகளோடு, 'ழ'கரம் ஏந்திய தமிழணங்கை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction