free website hit counter

டென்மார்க்கில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான மணல் கோட்டை : கின்னஸ் சாதனை

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டென்மார்க்கில் 20 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பெரிய மணல் கோட்டை கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

டென்மார்க்கின் சிறிய கடலோர நகரமான ப்ளோகஸில் கிட்டத்தட்ட 5,000 டன் மணலைக் கொண்டு 21.16 மீட்டர் உயரத்தில் மணல் கோட்டை கட்டப்பட்டுள்ளது.மொத்தம் 4,860 டன் மணலால் நுட்பமாக அலங்கரிக்கப்பட்ட கட்டமைப்பு கோட்டையாக இது ஒரு பிரமிட்டை நினைவூட்டி வருகிறது.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்ட மணல் கோட்டையை விட டென்மார்க்கின் இந்த மணல் கோட்டை 3 மீட்டர் உயரம் கொண்டுள்ளதால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

மேலும் கட்டமைப்பின் மேற்பகுதி கொரோனா வைரஸின் சித்தரிப்பைக் கொண்டுள்ளதுடன் அதன் டச்சு படைப்பாளரான வில்பிரட் ஸ்டிஜருக்கு உலகின் சிறந்த மணல் சிற்பிகள் 30 பேர் உதவியுள்ளனர்.

அடுத்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கடுமையான உறைபனி காலம் வரை இந்த கோட்டை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் அதுவரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction