free website hit counter

யானைகளுக்கான இசை!

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Paul Barton வட இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் மற்றவர்களைப்போல் யூடியூப் சானல் வைத்திருக்கிறார். ஆனால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல குறைப்பாட்டுடன் வாழும் யானைகளுக்கும் தான்.

தாய்லந்துக்கு குடியேறி அங்கேயே ஒரு இசை அமையம் வைத்து பியானோ கற்றுக்கொடுத்துவரும் இவர்;
2011 ஆம் ஆண்டு தன் சானலுக்காக குவாய் எனும் தாய்லந்து ஆற்றைப்பற்றி ஆவனமெடுக்க சென்றிருக்கிறார். அச்சமயம் அப்பிரதேசத்தில் வாழும் வயதான யானைகள், குறைப்பாட்டுடன் உள்ள யானைகளின் உலகைப்பற்றி தெரிந்துகொண்டார். உடனே பிரியப்பட்டு; அவர் அவற்றை பாராமரிக்கும் வன அதிகாரியிடம் தான் பியானோவுடன் திரும்பிவந்து இந்த யானைகளுக்காக அதை இசைக்கலாமா? என்று கேட்டார். பிறகென்ன அந்த பிரியம் பின் வரலாறு ஆனது.

தொடர்ந்து அங்குள்ள யானைகளுக்கு பியானோ இசைக்கிறார். அதனை அழகான காட்சிபதிவாக தமது சானேலிலும் பதிவேற்றி வருகிறார். மனிதர்களை போல் மெல்லி இசை விலங்குகளையும் அமைதியாக்கி; சௌகரிக சூழலை ஏற்படுத்துகிறதாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction