free website hit counter

இன்று உலக கொசு தினம் 2021 : ஏன் முக்கியமானது?

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நுளம்பு எனப்படும் கொசுக்கள் பரப்பும் நோய்களில் மலேரியாவை கண்டுபிடித்த பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக கொசு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று கொசுக்கள் மலேரியாவை பரப்புகின்றன என்பதை ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்தபோது, அவர் நோய் பற்றிய நமது புரிதலை புரட்சிகரமாக்கி, மலேரியா தடுப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தினார். இதனையடுத்து இந்நாளை ஆண்டுதோறும் உலக கொசு நாளாக கடைப்பிடிக்க வேண்டுகொள் விடுத்தார்.

இதன் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 1930களில் இருந்து சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை நடத்திவருகிறது.

மலேரியா குறித்த சில அம்சங்கள் :

ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்லும் நோயான மலேரியாவை பரப்புவதற்கு கொசுக்கள் பொறுப்புவகிக்கின்றன.

கொசுக்கள் மிகவும் ஆபத்தான உயிரினமாக அடையாளப்படுத்தப்படுகிறது, ஏனனில் பூமியில் உள்ள மற்ற விலங்குகளை விட கொசுக்கள் அதிக மனித இறப்புகளை ஏற்படுத்துகின்றன!

பெண் கொசுக்கள் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக மனிதர்களை கடிக்கின்றன. ஏனனில் அவை இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கும்போது, தமது புரதத்திற்கான இரத்தத்தை எடுத்துக்கொள்வதற்காக.

பெரும்பாலான மற்ற பூச்சியினங்கள் போலல்லாமல், கொசுக்கள் ஒளியை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை மாறாக கார்பன் டை ஆக்சைடு காற்றுக்கு ஈர்க்கப்படுபவை. அதாவது சுவையான இரத்தம் கொண்ட பாலூட்டி அருகில் இருப்பதற்கான அறிகுறியை இது கொசுக்களுக்கு வழங்குகிறது.

இரத்தத்தை எடுக்க கொசுக்கள் பயன்படுத்தும் கூர்மையான புரோபோஸ்கிஸ் ஊசிபோன்ற அமைப்பு; மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வலியில்லாத ஹைப்போடெர்மிக் ஊசிகளின் வடிவமைப்பை கொண்டவையாம்.


உலக கொசு தினம் ஏன் முக்கியமானது?

இந்நாள் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.

மலேரியா ஒரு பொதுவான நோயாக கருதப்படுகிறது. இது எவ்வாறு பரவுகிறது, நோய் குறித்த ஆபத்தில் இருக்கும்போது, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது முக்கியமாகிறது.

இந்நாள் மலேரியா ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு நிதி திரட்ட உதவுகிறது.

மலேரியா நோய்த்தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி ஆய்வில் உள்ளமையால், மலேரியா உலகெங்கிலும் உள்ள மக்களை இன்னும் அழித்துக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும்; தடுப்பூசி மற்றும் மேம்பட்ட சிகிச்சையை கண்டுபிடிக்க பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்நாளில் விஞ்ஞானிகளை பாராட்ட நினைவூட்டுகிறது

நோய் அழிக்கப்படுவதற்கு நீண்ட தூரம் இருந்தாலும், மருத்துவ அறிவியல் முன்னேற்றங்கள் நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் மற்றும் அதன் திசையன்களைப் பற்றிய வலுவான புரிதலுக்கு வழிவகுத்துள்ளன. அதற்காக பாடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பாராட்டி நினைவூட்டுவதும் அவசியமாகிறது.

உலகம் அசாதாரண கால நிலையில் இயங்கிக்கொண்டிருந்தாலும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் அவதானமாக செயற்படுவோம்.

Source : Wikipedia, nationaltoday

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction