free website hit counter

மூலிகை அறிவோம் அகத்தை சீர்படுத்தும் சீரகம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்தியதரைக்கடல் பிரதேசத்தை தனது பூர்வீகமாக கொண்ட சீரகம் இன்று பஞ்சாப், உத்தரபிரதேசம், சீனா, அமெரிக்கா, மோல்டா, சிசிலித் தீவுகளில் பயிர்செய்யப்படுகின்றது.

தாவரவியல் பெயர்- Cuminum cyminum
ஆங்கிலப் பெயர்- Cumin
சிங்களப் பெயர்- Sudu duru
சமஸ்கிருதப் பெயர்- ஜீரகா, அஜாஜி, ஜீர்ணா
வேறு பெயர்கள்- அசை, சீரி, நற்சீரி, போசனகுடோரி, பித்தநாசினி

சுவை- கார்ப்பு, இனிப்பு
வீரியம்- தட்பம்
பிரிவு- இனிப்பு

வேதியியற் சரக்குகள்-
Lipids
Flavonoid glycosides Apigenin
Luteolin
Chrysoeriole essential oil
Volatile oil
Hydrocarbon cymol
Acymene
Terpene

மருத்துவச் செய்கைகள்-
Carminative- அகட்டு வாய்வகற்றி
Antispasmodic- இசிவகற்றி
Stimulant- உற்சாகமுண்டாக்கி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Antibacterial- நுண்ணுயிர்க் கொல்லி
Emmenagogue- ருதுவுண்டாக்கி
Galactogogue- பாற்பெருக்கி
Hypotensive- இரத்த அழுத்த சீராக்கி
Astringent- துவர்ப்பி
Stomachic- பசித்தீ தூண்டி

நோய்நிலைமைகள்-
வாய்நோய்
வயிற்று வலி
குன்மம்(Ulcer)
குமட்டல்
வயிற்றோட்டம்
ஈரல்நோய்
கம்மல்
காமாலை
காசம்
கல்லடைப்பு
குருதிக்கழிச்சல்
இறைப்பு
மூக்கு நீர் பாய்தல்
வெறி
வளிநோய்

பயன்படுத்தும் முறைகள்-
" போசனகுடாரியை புசிக்கில் நோயெலாம் அறும் காசம் இராத காரத்தில் உண்டிட" என்று தேரையரால் பாடப்பட்ட பாட்டின் பொருளானது
போசனக்குடாரி எனும் சீரகத்தை உட்கொள்ள எல்லா நோய்களும் நீங்கும். அதனோடு கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட இருமல் நோய் விலகும் என்பதாகும்.
சுத்தமாக்கிய சீரகம் 170 g இஞ்சிச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தி பிறகு முசுமுசுக்கை சாற்றில் ஒருநாள் ஊறவைத்து உலர்த்தி அதனுடன் ஏலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கோஷ்டம், நெல்லிமுள்ளி, நெற்பொரி, வில்வப்பழத்தோடு இவைகளின் பொடி 8 g வீதம் சேர்த்து ஒன்றாய்க் கலந்து அதன் எடை வெள்ளை சர்க்கரை சேர்த்து வேளைக்கு 4-8 g தினம் இருவேளை கொடுக்க நோய்கள் விலகும்.
சீரகத்தை கையாந்தகரை சாற்றில் ஊறப்போட்டு எடுத்த பொடி 4 g, சர்க்கரை 2 g, சுக்குப்பொடி 2 g ஆக மூன்றையும் கலந்து தினம் இருவேளை கொடுக்க காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.
சீரகத்தை நாட்டு சர்க்கரையுடன் விடாது கடைப்பிடியாய் நாளும் உண்டால் தேகம் வன்மை பெறும். மேலும் மேலுதடு கீழுதடு இரண்டும் வீங்கியதால் ஏற்பட்ட நோய் விலகும்.
சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி இவைகளின் பொடி சம அளவாக எடுத்து அவ் அளவிற்கு பாதியளவு சர்க்கரை சேர்த்து 3 விரல் அளவு காலை, மாலை கொள்ள தீக்குற்றம் தன்னிலைப்படுத்தி வயிற்றின் மந்தத்தை போக்கி பசியை உண்டாக்கி உணவை செரிக்குமாறு செய்யும்.
சீரகத்தை பொடி செய்து வெண்ணெயுடன் கொடுக்க எரி குன்மம்(Ulcer) குணமாகும்.
சீரகம், குறுந்தொட்டி வேர் ஓரெடை எடுத்து குடிநீர் செய்து உட்கொள்ள மூன்றுநாள் ஆறு வேளையில் குளிர்ச்சுரம் நீங்கும்.
சீரகம் 34 g, உப்பு தேவையான அளவு சேர்த்தரைத்து நெய்விட்டு தாளித்து தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து கொடுக்க வளி, தீக்குற்றத்தாலான நோய்கள் விலகும்.
சீரகம் 51 g, தேசிச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 17 g சேர்த்து பிசைந்து புதுச்சட்டியில் அப்பி 3 நாள் வெயிலில் காயவைத்து எடுத்து ஒருசிட்டிகை அளவாக காலை, மாலை பத்து நாள் சாப்பிட வெட்டை, கை கால் குடைச்சல், எரிச்சல் முதலிய நோய்கள் நீங்கும்.
சீரகம் 200 g, உலர்ந்த கற்றாழை 170 g, பனைவெல்லம் 170 g இவற்றுடன் பால் நெய் தக்க அளவு சேர்த்து இலேகியமாக செய்து சாப்பிட வயிற்றுவலி, நீர்ச்சுருக்கு, எரிவு, வெப்பம், அசீரணம், கண்ணெரிவு, கை கால் உடல் எரிச்சல், ஆசனக்கடுப்பு , மலக்கட்டு இவை நீங்கும்.
34 g சீரகத்தை 1400 ml நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி சீரகம் ஒடியத்தக்க பதத்தில் வடித்துக் கொள்ளவும். இதைத் தேய்த்து தலைமுழுகி வர கண் நோய், மயக்கம், வாந்தி, தலைவலி, மந்தம் நீங்கும்.
340 g சீரகத்தை வல்லாரைச்சாற்றில் 4 நாள் ஊறவைத்து உலர்த்திப் பசுவின் பாலிலரைத்து 680 g பசுவின் வெண்ணெயில் கலந்து ஒருநாள் ஊறவைத்து காய்ச்சி அதில் 340 g கற்கண்டு, திரிசுகந்தம், அரத்தை, ஓமம் இவைகளின் சூரணம் வகைக்கு 17 g சேர்த்து கலந்து 8-16 g கொடுக்க பித்தம், வயிற்றுவலி, வாந்தி, அக்னி மந்தம், விக்கல் தீரும்.
மணத்திற்காகவும் செரிமானத்திற்காகவும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சுவையூட்டியாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction