free website hit counter

மூலிகை அறிவோம் - வயிற்று நோய்களை ஓட ஓட விரட்டும் -ஓமம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எல்லார் வீட்டிலும் இருக்கும் உடனடி மருந்து ஓமத்திராவகம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை நினைவு தெரிந்த நாள் முதல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஓமம் பற்றியும் அதன் மருத்துவ மகிமைகள் பற்றியும் இவ் மருந்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்- Carum copticum
குடும்ப பெயர்- Umbelliferae
ஆங்கிலப் பெயர்- lovage, Bishops weed
சிங்கள பெயர்- Asamodagam
சமஸ்கிருத பெயர்- agnivardini, Ajamoda
வேறு பெயர்கள்- அசமோதம், திப்பியம்


பயன்படும் பகுதி- விதை


சுவை- கார்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு


வேதியியல் சத்துக்கள்-
Fresh plant-Volatile oil
Phellandrene
Thymol


Fruit- p_cymol


மருத்துவ செய்கைகள்-
Antiseptic - அழுகலகற்றி
Antispasmodic- இசிவகற்றி
Astringent- துவர்ப்பி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Sialagogue- உமிழ்நீர் பெருக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Tonic- உரமாக்கி


தீரும் நோய்கள்-
வயிற்று பொருமல்
வயிற்று வலி
வயிற்றோட்டம்
மந்தம்
குன்மம்
குடலிரைச்சல்
இருமல்
சீதசுரம்
சீதபேதி
சுவாசகாசம்
ஆசனக்கடுப்பு
புழுத்தொற்று


பயன்படுத்தும் முறை- ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை இம் மூன்றும் சம அளவு எடுத்து பொடியாக்கி ஒன்றாக கலந்து, கலந்த அளவுக்கு சமனான கடுக்காய் சூரணம் சேர்த்து வேளைக்கு மூன்று விரலால் கிள்ளி எடுத்து மோரில் கலந்து குடித்தால் அக்கினி மந்தம் விலகி தீபன சக்தி உண்டாகும்.

ஓமம், கடுக்காய் தோல், சுக்கு, மிளகு, திப்பிலி, சிற்றரத்தை, அக்கரகாரம், திப்பிலி வேர் இவைகளின் சூரணம் சம அளவு எடுத்து அதன் எடைக்கு பாதியளவு சர்க்கரை சேர்த்து காலை மாலை மூன்று விரலால் கிள்ளி எடுத்து உட்கொள்ள புகையிருமல் தீரும்.

ஓமம் 35 g, மிளகு 35 g சேர்த்து வறுத்து வெல்லம் 35 g சேர்த்து அரைத்து மூன்று விரலால் கிள்ளி எடுத்து காலை மாலை 10 நாள் சாப்பிட வயிற்று கடுப்பு, பொருமல், கழிச்சல் தீரும்.

ஓமம் 3.5 kg தூணிநீரில் சேர்த்து எட்டிலொன்றாக வடித்து அதில் சர்க்கரை 350 g கரைத்து பாகு செய்து அமுக்கிராக் கிழங்கு, குக்கில், பறங்கிப் பட்டை, கார்போகரிசி 35 g வீதம் எடுத்து பொடியாக்கி தூவி நறுநெய் 24 நிமிடம் விட்டு கிளறி இலேகியஞ் செய்து வேளையொன்றுக்கு 5 g வீதம் உட்கொள்ள பறங்கிச்சூலை, சிரங்கு, புண், குஷ்டம், கரப்பான், சில்விடம், வாயு தீரும்.

ஓமம் 280 g, ஆடாதோடைச் சாறு, இஞ்சி ரசம், தேசிப்பழரசம், புதினாச்சாறு வகைக்கு 140 g வீதம் சயிந்தவலவணம் 35 g சேர்த்து பாவனை செய்து உபயோகிக்க இருமல், சுவாசகாசம், அஜீரணம் முதலியன நீங்கும்.

செரிமான பிரச்சினைகளுக்கு வெற்றிலையுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை சரியாகிவிடும்.

ஓமத்திலிருந்து பெறப்படும் ஓமத்தீர் ஊழி, வயிற்று பொருமல், வயிற்று வலி, அஜீரணபேதி, மந்தம் என்பவற்றிற்கு அதி சிறந்த நிவாரணம் ஆகும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction