free website hit counter

மூலிகை அறிவோம் - புற்றுநோயை எதிர்க்கும் திறன்‌ கொண்ட பூவரசு

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புற்றுநோயை எதிர்க்கும் திறன்‌ கொண்ட- பூவரசு
நவீன மருத்துவத்திற்கு சவாலாக அமைந்துள்ள புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக பல மருத்துவ ஆய்வுகள் நடைபெற்றவாறுள்ளன.
அந்த வகையில் எலிகளை வைத்து ஆய்வு செய்ததில் பூவரசப் பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பூவரசின் புதுமையான மருத்துவ குணங்களை இவ் வார மருத்துவ உரையில் அறிந்து கொள்வோம்.

தாவரவியல் பெயர்- Thespesia populnea
குடும்ப பெயர்- Malvaceae
ஆங்கிலப் பெயர்- Portia tree, Heart wood, Indian tulip tree, Umbrella tree, False Rosewood
சிங்கள பெயர்- Gansooriya
சமஸ்கிருத பெயர்- Gardha bhanda
வேறு பெயர்கள்- புவிராசன், பூளம்

பயன்படும் பகுதி-
இலை, பூ, காய், விதை, பட்டை, வேர்

சுவை- கைப்பு, துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு


வேதியியல் சத்துக்கள்-
Populnetin
Herbacetin
Populneol
Quercetin and its glycosides
Rutin
Gossypol
Beta-sitosterol and its glycosides
Nonacosane
Lupenone
Myricyl alcohol
Lupeol
Gossypetin
Thespesin

மருத்துவ செய்கைகள்-
Anti cancer - புற்றுநோய் எதிரியாக்கி
Anthelmintic- புழுக் கொல்லி
Anti inflammatory - தாபிதமகற்றி
Depurative- தூய்மையாக்கி
Tonic- உரமாக்கி

தீரும் நோய்கள்-
நாட்பட்ட குஷ்டம், கிருமி, விரணம், பேதி, பெருவியாதி, காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, கரப்பான், சிரங்கு, நீர்ப்பிரமேகம்

பயன்படுத்தும் முறைகள்-
இதன் இலையை அரைத்து சிறிது சூடாக்கி வீக்கங்களின் மீது வைத் துக்கட்டலாம்.

பூவை அரைத்துச் சிரங்குகளின் மீது பூசிவர அவை குணமாகும்.

காயிலிருந்து உண்டாகும் ஒருவித மஞ்சள் வருணமுள்ள பாலைச் சரும நோய்களுக்குத் தடவலாம். எவ்வித தழும்புகளுக்கும் பூச அவை ஆறிப்போகும். மூட்டு வீக்கங்களுக்குப் பூச வீக்கம் கரையும்.

காயையும் பட்டையையும் தைல முறைகளில் சேர்த்துக் காய்ச்சி மேற்கூறிய நோய்களுக்கு வழங்குவது வழக்கம்.

சிறுதுண்டுகளாக வெட்டிய பட்டை 180g, தண்ணீர் 1400 ml விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டியேனும் அல்லது 350g காய்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி 1400ml நீர்விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றவைத்து வடிகட்டியேனும், 60-120ml வீதம் 3-4 தரம் கொடுத்துவரக் காணாக்கடிவிடம், பெருவயிறு, வீக்கம் முதலியன நீங்கும்.

பூவரசம்பட்டை எண்ணெயினால், சருமநோய்கள், மேகம் தீரும்

காயின் எண்ணெயினால் குன்மநோய், மகோதரம், பெருவயிறு ஆகியன நீங்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction