free website hit counter

மூலிகை அறிவோம் - வாத நோய்களைப் போக்கும் வாதமடக்கி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாத நோய்களைப் போக்கும்- வாதமடக்கி
வாத நோய்களைக் (Nervous disorders) கண்டித்து சுகமளிப்பதால் காரணப் பெயராக தோன்றியதே இதன் பெயராகும். வாதமடக்கியின் மருத்துவ சிறப்புக்களை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்- Clerodendron phlomidis
குடும்ப பெயர்- Verbenaceae
ஆங்கிலப் பெயர்- Sage glory bower
சிங்கள பெயர்- Agnimantha
சமஸ்கிருத பெயர்- Vataghni
வேறு பெயர்கள்- தழுதாழை, தக்காரி, நந்தக்காரி

பயன்படும் பகுதி-
இலை, வேர்

சுவை- கைப்பு, துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Flavonoids
Scutellarein
Pectolinarin
d-mannitol
beta-sitosterol
Ceryl alcohol
Clerodin
Clerosterol
Clerodendrin A

மருத்துவ செய்கைகள்-
Alterative- உடல் தேற்றி
Astringent - துவர்ப்பி

தீரும் நோய்கள்-
பக்க வாதம் (Paralyze) முதலிய 80 வாதநோய்கள்- Nervous disorders
கபபீநிசம்
கிரந்தி
தேக குடைச்சல்
வயிற்றுவலி- Stomachache
கொலரா

பயன்படுத்தும் முறைகள்-
இலைச்சாறு அல்லது வேர்ச்சாற்றை எடுத்துச் சமவளவு விளக்கெண்ணெய் சேர்த்து, மேக வியாதிகளுக்குக் (skin disease) கொடுத்து வரலாம், அல்லது இலைச் சூரணத்தைத் (Powder) தனியாகக் கொடுக்கலாம்.

இலைச்சாறு எடுத்து அதில் 17ml வீதம் காலை, மாலை உள்ளுக்குக் கொடுக்கச் சுரத்தைத் (fever) தணிக்கும். இத்துடன், இலைச் சாற்றை மூக்கில் இரண்டொரு துளி விடலாம்.

இலையை நீரில் சேர்த்துக் காய்ச்சி வாதவலியுள்ள பாகங்களைக் கழுவலாம்.

இலைச்சூரணத்தை ஆளி எண்ணெய் விட்டுப் பிசைந்து சிறிது வெதுப்பிச் சூட்டுடன் வைத்துக் கட்ட நெறிக்கட்டிகள் கரையும்.

வேரை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, வாதப்பிடிப்புகளுக்குத் தடவி வரலாம் அல்லது இலையில் விளக்கெண்ணெய் தடவி வெதுப்பி வைத்துக் கட்டலாம்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction