free website hit counter

மூலிகை அறிவோம் - நீரிழிவை கட்டுப்படுத்தும் கடலழிஞ்சில்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நீரிழிவை கட்டுப்படுத்தும் கடலழிஞ்சில்.
இலங்கைக்கே உரித்தான இம் மூலிகைத் தாவரமானது,
நீரிழிவு நோயில் ஏற்படும் வெகு மூத்திர (Polyuria) நிலையில் நல்ல பலனை அளிக்கக் கூடிய ஒரு முக்கிய மூலிகைச் செடி. இதனை பொடி செய்து தேயிலைக்கு மாற்றீடாகவும் உபயோகிக்கலாம். கடைகளில்/ மருந்தகங்களில் இதன் பெயரை சொல்லி வாங்கிப் பயன் பெறுங்கள்.

தாவரவியல் பெயர்- Salacia reticulata
குடும்ப பெயர்- Hippocrateacea
ஆங்கிலப் பெயர்- Salacia/ Salaretin
சிங்கள பெயர்- kothala himbutu
வேறு பெயர்கள்-
கடல்ராஞ்சி, கிராந்தி
பயன்படும் பகுதி-
பட்டை, வேர்ப்பட்டை

சுவை- துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு

மருத்துவ செய்கைகள்-
Antiseptic - அழுகலகற்றி
Astringent- துவர்ப்பி
Demulcent- உள்ளழலாற்றி

தீரும் நோய்கள்-
மதுமேகநீர் (Polyuria in Diabetes)
வாதாதி முத்தோட மேகநீர்
தொந்த மூத்திரம்
படர்தாமரை
சொட்டு மூத்திரம்- (Oliguria)
சுரம் (fever)
அதிசாரம் (Diarrhea)
ஒவ்வாமை (Allergy)
பயன்படுத்தும் முறைகள்-
இதன் பட்டையை இடித்து வேளைக்கு 10g எடுத்து ஊறல் கஷாயமேனும் குடிநீரேனும் செய்து கொடுத்து வர வெகு மூத்திரம் முதலாகிய மேகநீர் வகைகள் அதிசாரம் சாந்தமாகும்.

மேலும் மேகநீர் முதலிய நோய்களுக்குரிய மூலிகைகளுடன் இப் பட்டையையும் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுக்கலாம்.

இதன் முற்றிய கட்டையை கொண்டு தண்ணீர்க் குடுவையும் தயாரிக்கின்றனர். அதில் இரவில் நீரை ஊற்றி வைத்து காலையில் குடிக்கலாம். நீரிழிவு நோயாளர்களுக்கு நன்மை பயக்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction