free website hit counter

மூலிகை அறிவோம் - பள பளக்கும் பவள மல்லிகையின் மருத்துவ குணங்கள்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பள பளக்கும் பவள மல்லிகையின் மருத்துவ குணங்கள்
முறைச்சுரம் முதல் Sciatica வரை பல மருத்துவ குணங்களை கொண்ட பவள மல்லிகையின் மகத்துவங்களை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்- Nyctanthes arbor-tristis
குடும்ப பெயர்- Oleaceae, Nyctanthaceaes
ஆங்கிலப் பெயர்- Night Jasmine , Coral Jasmine, Tree of Sorrow
சிங்கள பெயர்- Sepalikas
சமஸ்கிருத பெயர்- Parijatakas
வேறு பெயர்கள்-s
பரிசாதம், பாரிஜாதம்

பயன்படும் பகுதி-
இலை, வேர்ப்பட்டை

சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Iridoid glycosides
Mannitol
Beta-amyrin
Beta-sitosterol
Hentriacontane
Benzoic acid
Astragalin
Nicotiflorin
Oleanolic acid
Nyctanthic acid
Friedelin
Lupeol
Polysaccharide glucomannan

மருத்துவ செய்கைகள்-
இலை
Anti inflammatory- தாபிதமகற்றி
Antispasmodic - இசிவகற்றி
Cholagogue - பித்தநீர் பெருக்கி
Diaphoretic - வியர்வை பெருக்கி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Febrifuge - வெப்பமகற்றி
Laxative- மலமிளக்கி
Respiratory stimulant - சுவாச தூண்டி
Tonic- உரமாக்கி

வேர்ப்பட்டை
Antibilious- பித்த சமனி
Expectorant - கோழையகற்றி

தீரும் நோய்கள்-
சுரம், கிருமி, வாதநோய், பேராசன நரம்புத்தாபிதம்(Sciatica) முதுகுவலி, சொறி, சிரங்கு, நமைச்சல், மேகநோய்

பயன்படுத்தும் முறைகள்-
இளங்கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து முறைச்சுரத்திற்கு தினம் இருவேளை கொடுக்கத் தீரும்.

இலையை வெந்நீரிலிட்டு நன்றாய் ஊறவைத்து தினம் இருவேளை கொடுத்துவர முதுகுவலி, Sciatica, சுரம் இவைகள் குணமாகும்.

இலைச்சாற்றுடன் சிறு உப்பிட்டு , பின் சிறிது தேனும் கலந்து கொடுக்க மலக்கிருமிகள் விழும்.

இலையைக் குடிநீரிட்டுக் கொடுக்கக் கபம் போகும், மலங்கழியும்.

விதையைப் பொடி செய்து எண்ணெயில் குழைத்துத் தலையிலுண்டாம் சொறி, சிரங்கு, நமைச்சல் இவைகளுக்குத் தடவிவர அவைகள் ஒழியும்.

வேரை அரைத்துப் பாலில் கலக்கிக் கொடுக்க மேகம் நீங்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction