பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்டுவதற்காக வேலியோரங்களில் பயிரிடப்படும் சாமந்திப் பூவானது எமது உடலிலுள்ள நோய்களையும் போக்கும் குணமுடையது என்று உங்களுக்குத் தெரியுமா?
தாவரவியல் பெயர்- Chrysanthemum indicum , Pyrethrum indicum
குடும்ப பெயர்- Compositae, Asteraceae
ஆங்கிலப் பெயர்- Chamomile flower
சிங்கள பெயர்- Kapuru mal
சமஸ்கிருத பெயர்- Shevmntika pushpam
வேறு பெயர்கள்- சிவந்திப் பூ, செவ்வந்திப் பூ
பயன்படும் பகுதி- பூ
சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Daucosterol
Cumambrin-A
Glycerol-l-monobehenate
Palmitate
பயன்படுத்தும் முறைகள்-
இதை குடிநீரிட்டுக் கொடுக்க மேற்கூறிய நோய்கள் தீரும்.
சாமந்திப்பூ 17 g, வெந்நீர் 350 மில்லி லிட்டர் இதை 15 நிமிடம் மூடி வைத்திருந்து வடிகட்டி வேளைக்கு 50 ml- 60ml கொடுக்கலாம்; அதிக அளவில் கொடுத்தால் வாந்தியாகும்.
சுளுக்கு, வீக்கம் முதலியவைகளுக்கும் இதை ஒற்றடம் கொடுக்கலாம்.
பூக்களையிட்டு தைலம் வடிக்கலாம்; இதில் வேளைக்கு ஒன்று முதல் ஐந்து துளி வீதம் சர்க்கரையில் விட்டுக் கொடுக்கலாம். இத் தைலத்தை கீல்வாதம், வீக்கம் முதலியவைகளுக்கு பூசலாம்.
பூவிலிருந்து ஒருவகை சத்து எடுக்கலாம். இதை 130mg முதல் 390mg அளவு மாத்திரையாக செய்து மேற்கூறிய நோய்களுக்கு கொடுக்கலாம்.