free website hit counter

மூலிகை அறிவோம் - நல்லாரோக்கியம் தரும் நெல்லி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அருநெல்லி, கருநெல்லி என இரண்டு வகை உண்டு.
தாவரவியல் பெயர்- Phyllanthus emblica
குடும்ப பெயர்- Euphorbiaceae
ஆங்கிலப் பெயர்- Indian gooseberry
சிங்கள பெயர்- Ambula, Nellika
சமஸ்கிருத பெயர்- Amalaki, Amrita, Bahuphali
வேறு பெயர்கள்-
ஆமலகம், ஆலகம், ஆம்பல், கோரங்கம், தாத்தாரி, மிறுதுபலா, மீதுந்து

பயன்படும் பகுதி-
இலை, பூ, பட்டை, வேர், காய், விதை
சுவை- புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Vitamin C
Tannin
Saponin
Gallic acid
Beta_amyrin
Phyllanthol
Lupeol

மருத்துவ செய்கைகள்-
இலை, பட்டை, காய்ந்த பழம்
Astringent-துவர்ப்பி

பூ
Laxative-மலமிளக்கி
Refrigerant- குளிர்ச்சி உண்டாக்கி

பழம்
Diuretic-சிறுநீர் பெருக்கி Laxative-மலமிளக்கி
Refrigerant- குளிர்ச்சி உண்டாக்கி

தீரும் நோய்கள்-
பைத்தியம், கபநோய் பீனிசம், வாந்தி, தலைசுற்றல், பிரமேகம்

நெல்லி மர வேர்
வாந்தி, உணவில் விருப்பமின்மை, திரிதோஷ கோபம்

நெல்லி முள்ளி
உட்சூடு, மாதர் ருது தோஷம், தாகம், பித்தம், சிறுநீர் அருகல், பைத்தியம், பித்தவாந்தி, பிரமேகம்

பயன்படுத்தும் முறைகள்-
நெல்லிக்காயை பச்சையாக உண்ண பித்த வியாதிகள் நீங்கும்.

நெல்லிமுள்ளியை அரைத்து தலைக்கு பூசி முழுக கண் குளிரும்; கண் நோய் விலகும்.

கருநெல்லியை உண்டால் உடல் பலம் பெறும்.

நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிட அரோசகம் (உணவில் விருப்பமின்மை) நீங்கும்.

நெல்லிவற்றல் அல்லது விதையை கசாயம் செய்து கொடுக்க பித்தமயக்கம், தாகம், அரோசகம் இவை நீங்கும்.

இலைக்கொழுந்தை கசாயம் செய்து சாப்பிட பித்த வாந்தி, அரோசகம் தீரும்.

பட்டை சாற்றை தேன் மற்றும் மஞ்சளுடன் கொனோரியாவுக்கு கொடுக்க குணமாகும்.

நீண்ட நாள் வயிற்றுப் போக்கிற்கு இலைச்சாறுடன் வெந்தய விதைகளை கொடுக்க அது குணமாகும்.

சிறுநீரக நோய்களுக்கு பழச்சாற்றை சீந்தில் தண்டு மாவுடன் கொடுக்கலாம்.

வீட்டில் ஒரு மரம் நாட்டி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula