ஜூன் 14ம் தேதியான இன்று பாதுகாப்பான இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி
தெரிவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் 'WBDD' என அழைக்கப்படும் உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடிவருகிறது.
ஒவ்வொரு மக்களும் உலமெங்கும் ஏபிஓ இரத்தக் குழு முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்தநாள் விழாவிலிருந்து இத்தினத்தை கொண்டாடடிவருகிறார்கள்.
இத்தினத்தில் முக்கியமாக அறிந்திருக்கவேண்டிய சில விடயங்கள் :
இரத்த தானம் செய்வதன் நன்மைகள்:
1. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
2. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
3. புற்றுநோயை விலக்கி வைக்கிறது
4. மென்மையான சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
5. உணவின் கலோரினை குறைக்கிறது.
இரத்த தானம் செய்வதற்கான அளவுகோல்கள் என்ன?
1. குருதிக்கொடையாளர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மேலும் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. குருதிக்கொடையாளரின் வயது மற்றும் எடை 18-65 வயது இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.
3. இதய துடிப்பு வீதம்; முறைகேடுகள் இல்லாமல் 50 முதல் 100 வரை இருத்தல் சிறந்தது.
4. ஹீமோகுளோபின் நிலை; குறைந்தபட்சம் 12.5 கிராம் / டி.எல் இருத்தல் அவசியம்
5. இரத்த அழுத்தம்; டயஸ்டாலிக்: 50–100 மிமீ எச்ஜி, சிஸ்டாலிக்: 100-180 மிமீ எச்ஜி.
6. உடல் வெப்பநிலை; வாய்வழி வெப்பநிலை 37.5. C க்கு மிகையில்லா சாதாரணமாக இருக்க வேண்டும்.
7. அடுத்தடுத்த இரத்த தானங்களுக்கு இடையிலான காலம் 3 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
உங்களால் முடிந்தால் இத்தகவல்களை மற்றவர்களும் பயன்படும்படி பகிரங்கள்; குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வை அனைவரிடத்திலும் கொண்டு சேருங்கள்.
source : english.jagran