free website hit counter

மூலிகை அறிவோம் - மருத்துவ பயன்மிக்க பலா

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகும் மரம்.
காடுகளில் சுயேச்சையாகவும் நாடுகளில் நட்டும் பயிரிடப்படுகிறது. இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப்பலா பல இனங்கள் உண்டு. முக்கனிகளில் மிக முக்கியமான ஒரு பழ வகையாகும்.

தாவரவியல் பெயர்-Artocarpus heterophyllus
குடும்ப பெயர்- Moraceae
ஆங்கிலப் பெயர்- Jak tree
சிங்கள பெயர்- Herali,kos, Waraka
சமஸ்கிருத பெயர்- Panasa,Champa,kosha
வேறு பெயர்கள்-
சக்கை, பலவு, பலாசம், பனசம், வருக்கை, ஏகாரவல்லி

பயன்படும் பகுதி-
இலை, காய், பழம், விதை, பால், வேர்

இலை, காய், விதை, பால் வேர்
சுவை- துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

பழம்
சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
பிரிவு- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Fruit-Carbohydrate, Vitamin C
Seeds- starch
Wood- Morin, cyanomaclurin, catechins,piperonal, essential oil

மருத்துவ செய்கைகள்-
இலை, காய், விதை, பால், வேர்
Astringent-துவர்ப்பி

பழம்
Demulcent- உள்ளழலாற்றி
Laxative- மலமிளக்கி
Nutrient- உடல் உரமாக்கி

தீரும் நோய்கள்-
குன்மம்
தாகம்
பித்த நோய்

சொறி சிரங்கு
சிறுநீரக கல்
நீரிழிவு

குறிப்பு-
பலா இலையில் உண்டால் அடங்கிய பித்தம் அதிகரிக்கும்.

பிஞ்சினால் மந்தாகினி(உணவு செரியாமை), குன்மம் உண்டாகும்.

காயினால் அக்கினி மந்தம், வாத கோபம், ஆயாசம், சுவாசம் ஆகியவை உண்டாகும்.

பழத்தினால் வாத, பித்த, கப தொந்தம், கரப்பான் நோயும், முன்பில்லாத பிணிகளும் உண்டாகும்.

கருக்கிய பலாக்கொட்டையினால் அள்ளு மாந்தம், குடலில் தங்கிய கபத்தால் உண்டாகின்ற மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற நெஞ்சில் புளியேப்பம், கல் போல் வயிறுகெட்டிப்படல், அதில் ஒற்றைச்சாணளவு இரும்பு சலாகை செருகினது போன்ற உபத்திரவம் இவைகள் உண்டாகும்.

பயன்படுத்தும் முறைகள்-
பலா இலைக் கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

பலா இலையில் உண்டால் குன்ம நோய் நீங்கும்.

இலைச்சாறும் பட்டைச்சாறும் சேர்த்து சிறுநீரகக்கல்லுக்கு நீரிழிவு நோய்க்கும் கொடுக்கப்படும்.

பிஞ்சு மிகவும் துவர்ப்பானது. இதை சமைத்து உண்பது நாட்டு வழக்கம். வேக வைத்து தின்பதும் உண்டு. இதனால் சுக்கில விருத்தி உண்டாகும்; தாகமும் பித்தமும் போகும். ஆனால் மந்தத்தை உண்டாக்கும். குன்ம நோயையும் உண்டாக்கும் என கூறப்படுகின்றது.

பழம் மிகவும் ருசியானது. ஆனால் இலகுவில் ஜீரணிக்காது. அதிகமாய் உண்டால் நஞ்சாகும்.

கொட்டைகளை வறுத்து அல்லது சுட்டுத் தின்னலாம். ஆனால் தேக சுகத்துக்கு ஏற்றதல்ல.

மரத்திலிருந்து பால் எடுக்கலாம். இப்பால் மிகவும் பசையுள்ளது. இதனுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து குழைத்து கட்டிகளுக்குப் போட அவை அமுங்கும் அல்லது பழுத்து உடையும்.

வேரை கஷாயமிட்டு அதிசாரத்துக்கு கொடுக்கலாம். இதை அரைத்து சொறி சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction