free website hit counter

மூலிகை அறிவோம் - வாழ வைக்கும் வாழை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவது நம் தமிழர் மரபு.
வீட்டு விஷேச தினங்களில் வாழை மரம் குலையுடன் கட்டப்படுவது இன்றும் கூட வழக்கத்தில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அன்றைய தமிழனின் அறிவியல் வளர்ச்சி. கற்கால மனிதன் அறிந்த சித்த ரகசியத்தை தற்கால மனிதர்களும் அறியலாம் வாருங்கள்.

தாவரவியல் பெயர்-Musa sapientum
குடும்ப பெயர்- Musaceae
ஆங்கிலப் பெயர்- Plantain tree, Banana tree
சிங்கள பெயர்- kesal
சமஸ்கிருத பெயர்- Kadali
வேறு பெயர்கள்-
அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகிலி, திரணபதி

பயன்படும் பகுதி- சமூலம், இலை, பூ, பிஞ்சு, காய் ,பழம், பட்டை, கட்டை, தண்டு, நீர்

பூ, பிஞ்சு, காய்
சுவை- துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு

நீர், கட்டை, தண்டு
சுவை -துவர்ப்பு
வீரியம் -வெப்பம்
பிரிவு -கார்ப்பு

பழம்
சுவை -இனிப்பு
வீரியம் - சீதம்
பிரிவு -இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
High carbohydrates
Tryptophan
Sitoindoside IV
Uronic acid

மருத்துவ செய்கைகள்-
பூ, பிஞ்சு, காய்
Astringent-துவர்ப்பி

நீர்
Styptic-குருதிப்போக்கடக்கி

கட்டை ,தண்டு
Anti_pitta-பித்தமடக்கி
Diuretic-சிறுநீர் பெருக்கி

இலை, பட்டை
Refrigerant-குளிர்ச்சி உண்டாக்கி

பழம்
Demulcent-உள்ளழலாற்றி
Laxative-மலமிளக்கி
Nutritive- உடல் உரமாக்கி

தீரும் நோய்கள்-
பிரமேகம், மூலக் கடுப்பு, எரி காயங்கள், இரத்த மூலம், வெள்ளை, பைத்தியம், கபாதிக்கம், உதரக்கடுப்பு, இருமல், கைகால் எரிச்சல், பித்த வாந்தி, பித்த அதிசாரம், உமிழ்நீர் சுரப்பு, வயிறு உளைதல் , பாண்டு, எலும்புருக்கி, எரி மூத்திரம், அயர்வு, பெருவயிறு

பயன்படுத்தும் முறைகள்-
வாழை இலையில் உணவு உட்கொண்டால் தோல் பளபளப்பும் சுகபோகங்களும் கிடைக்கும். பசியின்மை, உடல்பலவீனம் நீங்கும். பித்த கோபம் சாந்தம் ஆகும்.

வாழை தளிரான இலையை தீக்காயங்கள் அல்லது வெந்நீர் பட்டதால் உண்டாகும் காயம் ஆகியவைகளுக்கும் வைத்துக் கட்டினால் சீக்கிரத்தில் உலர்ந்துவிடும். இலையின் மேற்புறத்தை இரண்டு நாள் வைத்து கட்டின பிறகு அடிப்புறத்தை வைத்துக் கட்ட வேண்டும். உலர்ந்து வருகின்ற புண்களுக்கு எண்ணெய் சீலையை மடித்து மேலே போட்டு வாழை இலையை வைத்து கட்டிக் கொண்டு வந்தால் துணி எண்ணெயாகவே இருக்கும். காயம் சீக்கிரத்தில் உலர்ந்துவிடும். வாழை இலைக்கு சிற்றாமணக்கு நெய் தடவி காயங்களுக்கு உபயோகிக்கலாம். இந்த இலையை கண் நோவுக்கு கண் மறைவுக்கு வைத்து கட்டினால் வெளிச்சத்திற்கு மறைவாயும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

பூவை சமைத்து உண்ணலாம்.

இதை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி கை-கால் எரிச்சலுக்கு ஒற்றடமிட்டுப் பிறகு இதையே வைத்து கட்டலாம்.

இதன் சாற்றுடன் சிறு பனங்கற்கண்டு கூட்டி உட்கொள்ள இரத்த பிரமேகம், வெள்ளை, வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

இளம் பூவெடுத்து பிட்டவியலாக அவித்து சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து பெரும்பாடு நோய் உள்ளவர்களுக்கு வழங்கலாம்.

வாழைக் கிழங்கில் ஊறுகின்ற நீரை காலை மாலை 50-100 ml சாப்பிட்டு வர பெருவயிறு, ரத்த கிரிச்சரம், எரி மூத்திரம், விரணம், சோமரோகம், அயர்வு, பாண்டு, எலும்புருக்கி ஆகியவை நீங்கும். தேகத்திற்கு வன்மை உண்டு பண்ணும்.

கிழங்கை இடித்து அதிலுள்ள நீரை போக்கி திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டலாம்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction