free website hit counter

மூலிகை அறிவோம் - காவல் காக்கும் கற்றாழை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மூலிகை அறிவோம்

கற்றாழையின் குணங்கள்.

மங்கையரின் மனங்கவர் தாவரம் மற்றும் மேனியை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.

இதனாலேயே கன்னி ,குமரி என்பதாக அழைக்கப்படுகின்றது;

Vesline போன்ற அழகு சாதனங்களிலும் சேர்க்கப்படுகின்றது.

தாவரவியல் பெயர்-Aloe vera
குடும்பம் பெயர்- Liliaceae ஆங்கிலப் பெயர்- Indian Aloes
சிங்களப் பெயர்- குமாரிக்கா
சமஸ்கிருத பெயர்- குமரி, குமாரிக்கா
வேறு பெயர்கள்- கன்னி, குமரி
பயன்படும் பகுதி- பால் சோறு, சாறு, சமூலம்

சுவை -இனிப்பு
வீரியம்- குளிர்ச்சி
விவாகம் -இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-

Glyburide
Anthraquinone glycosides
Acemannan
Carboxypeptidase

Salicylate
Barbaloin
Isobarbaloin
Emodin
Resin
Cinnamic acid
d- arakinose
Oxydase
Volatile oil

மருத்துவ செய்கைகள் உரமாக்கி- Tonic
உடல் தேற்றி -Alternative
நீர் மலம் போக்கி- Purgative
ருது உண்டாக்கி- Emmenagogue
அகட்டு வாய்வு அகற்றி- Carminative
வரட்சி அகற்றி- Emollient
தாபிதம் அகற்றி- Anti-inflammatory
நுண்ணுயிர்க் கொல்லி- Antimicrobial

தீரும் நோய்கள்-
வாத மேகம், கபமேகம், பெருவியாதி, மூலம், குன்மம், பித்தக் கிரிச்சரம், சரீர எரிவு, மாதவிடாய் வலி, ஈரல் நோய், கல் அடைப்பு, குடல் நோய், மலக்கட்டு, எரி காயங்கள்

பயன்படுத்தும் முறை- இளமடலுடன் சீரகம், கற்கண்டு சேர்த்து அரைத்து இரத்தமும் சீதமும் கலந்த பேதிக்குக் கொடுக்கலாம்; மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து ஆரம்ப மண்ணீரல் நோய்க்கு 10-17 g வரையில் உபயோகிக்கலாம்.

கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவ சுத்தம் ஆகும். இதில் சிறிது படிகாரம் அல்லது சீனகற்கண்டு சேர்த்து சிறு துண்டில் முடிந்து தொங்கவிட்டு அதன் கீழ் ஒரு பாத்திரம் வைக்க அதில் நீர் வடியும். இதை கண்களில் விட கண் நோய், கண் சிவப்பு, கண்ணருகல் முதலியன மாறும்.

இதன் தனிச்சாற்றை வெப்பத்தை தணிக்க தகுந்த பற்ப செந்தூரங்களுக்கு அனு பானமாக உபயோகிக்கலாம்.

இதன் சாற்றைக் கொண்டு எண்ணெய், நெய்,இலேகியம் முதலியன செய்து மேற்கூறிய வியாதிகளுக்கு உபயோகிக்கலாம்.

இந்தச் சாற்றை வெதுப்பி மாந்தத்திற்கும் தாகத்திற்கும் உபயோகிக்கலாம்; அபின் சிறிது சேர்த்து தலைக்குப் பற்றிட தலை நோய் நீங்கும்.

நல்லெண்ணெய் சமபாகம் கலந்து காய்ச்சி தலையில் தடவி வர தூக்கம் உண்டாகும். வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள், இவைகளை சாற்றுடன் சேர்த்துண்ண மூத்திர கிரிச்சரம் (heamaturea), உடல் அரிப்பு, உடல் வெப்பம், உள்வெட்கை நீங்கும்.

சோற்றை எடுத்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து தலை முழுகி வர கூந்தல் வளரும்; நித்திரை உண்டாகும்.

சிற்றாமணக்கு எண்ணெய் 350 l கற்றாழைச் சோறு 100 g ஊறவைத்து அரைத்து வெந்தயம் 10 g வெள்ளை பூண்டு ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி வடிகட்டி காலையிலும் இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் ஒரு தே. கரண்டி வீதம் சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும், உடல் பெருகும், மேக அனல் மாறும்.

கற்றாழையின் பாலினை கண் இரைப்பையில் உண்டாகும் புண்களுக்கு தடவலாம்.

கரியபோளம் என்பது சிறு கற்றாழையின் உலர்ந்த பால்.

இது கறுப்பாகவும் சிவப்பாகவும் இருக்கும்.

கரியபோளம் மார்பு வலி, வீக்கம், வாதம் , வயிற்று வலி, பக்க நோய், மேகக்கட்டி, கை கால்களில் உண்டாகி நிலைத்த வலி இவைகட்கு மிக்க உபயோகமாகும்.

நூற்றி முப்பது மில்லிகிராம் தொடக்கம் 200 மில்லி கிராம் வரை இரண்டு மூன்று நாளுக்கு ஒருமுறை உபயோகிக்க பசியை அதிகரிக்க செய்யும்.

325 மில்லிகிராம் தொடக்கம் 650 மில்லிகிராம் பேதியாகும்.

இதில் கைப்பும் நாற்றமும் இருப்பதால் தனியே கொடுக்கும் வழக்கம் இன்றி வேறு மருந்துகளுடன் சேர்த்து கொடுப்பார்கள்.

மேலும் பெருங்குடலும் ஆசனத்திலும் போய் வியாபித்து வெப்பம் உண்டாக்கும் தன்மை உள்ளதால் கர்ப்பிணிக்கும் மூலரோகமுள்ளவர்களும் எச்சரிக்கையுடன் உபயோகித்தல் முறைமையாகும்.

இதன் வீரியம் கருப்பையை தாக்கி கருவைக் கலைக்கும்.

அக்னி மந்தம், மஞ்சள் காமாலை, சூதகக்கட்டு, சூதக பாண்டு போகும்.

செடியின் வேரை கசாயமிட்டு சுர நோய்களில் சுரம் இறங்க உபயோகிக்கலாம். கஷாயத்தை மலக்கட்டை நீக்கவும், ருது உண்டாக்கியாகவும் உபயோகிக்கலாம்.

200 மில்லிகிராம் தொடக்கம் 390 மில்லிகிராம் கொடுக்க மலத்தை கழிக்கும்.

குறிப்பு -மாதவிடாயும் மூலவியாதியில் காணும் இரத்தப் போக்கும் திடீரென்று நிற்பதால் உண்டாகும் தலை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

அனைவரினது வீட்டிலும் நட்டு வளர்க்க வேண்டிய ஒரு மாமருந்து இக் கற்றாழையாகும். நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்த்து பல பயன்களையும் பெறுவோமாக!

~சூர்ய நிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction