free website hit counter

என்ன தான் சொல்கிறது கனவுகள்...?

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்ன தான் சொல்கிறது கனவுகள்...?

தொடர்ச்சி...

இன்றும் சில புதுமைகளுடன்..

பொதுவாக கனவென்றாலே இரவில் தான் வரும் என்று வரையறுத்து வைத்திருக்கிறோம் நாம். ஆனால் நாம் விழித்துக்கொண்டிருக்கும் போதும் கனவுகள் எம்மை துரத்திக்கொண்டு தானிருக்கிறது. கனவுகளை துரத்தி நாம் ஓடும் இலட்சிய புத்திரர்களான நாம் நம்மை துரத்தும் கனவுகளை பற்றி அறியவும் கொஞ்சம் நேரம் கொடுப்போமே..

உறக்கத்தின் எந்த படிநிலையில் கனவுகள்வருகிறது என்று சென்ற கட்டுரையில் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு வரும் கனவுகள் என்னென்ன வகைப்படும் என்று முதல் கட்டுரையில் பார்த்தோம். அவை பற்றிய விரிவான விடயங்களை இங்கு பார்ப்போமே...

1. பகல் கனவுகள் (Day dreams)
உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே உள்ள உணர்வு நிலையைத்தான் பகற்கனவு என்கிறோம். வீட்டில் மல்லாக்காக படுத்து கொண்டு விட்டத்தில் பார்வையை போட்டுக்கொண்டு நாம் கற்பனை சுகத்தில் திழைத்திருக்கிற போது "பகல் கனவு பலிக்காதடா" என்று பார்ப்பவர்கள் எம்மை சீண்டுவதுமுண்டு. அப்படி ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரியாக 70-120 நிமிடங்களை பகற்கனவில் செலவழிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. காதலில் கட்டுண்டு போனவர்களுக்கு இந்நேர இடைவெளி முழு நாளாகிப்போனாலும் வியப்பதற்கில்லை தான். சுருக்கமாக சொல்வதாயின் நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது நம் கற்பனை குதிரைகளை பறக்க விடும் வேளையே பகற்கனவு.

2.தெளிவு நிலை கனவுகள் (lucid dreams).
இவ்வகை கனவுகளை ஆராய்ச்சி கோணத்தில் பார்க்கையில் கனவுகளின் பொற்கலசம் என்றால் மிகையாகாது.
ஆம் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டேயிருக்கும் ஒரு வகை தான் Lucid dreams . இந்த நிலையில் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்திருப்போம்.சிலர் அப்படியே ஆனந்தமாக கனவை தொடர்ந்து கொண்டிருப்பர். பெரும்பாலும் இந்த வகை கனவுகளில் கனவு காண்பவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார்.

3.கொடுங்கனவுகள் (Nightmares).
இவ்வகை கனவுகள் சிறுவர்களுக்கு அதிகம் வருவதுண்டு. தூங்கும் போது பயங்கரமான கனவுகள் தோன்றி திடீரென்று படபடப்புடனும் பயத்துடனும் எழவைக்கும் கனவுகளையே Nightmares என்கிறோம். சில சமயங்களில் வாழ்வில் நடக்கும் விபத்துக்கள்/ மோசமான சூழ்நிலைகளாலும் இத்தகைய கனவுகள் வரலாம். இந்த கனவுகளை Post dramatic stress nightmare என்று அழைக்கிறார்கள்.

சிலருக்கு இக்கனவுகள் வருவது வழக்கமாக இருக்கும். இது பரம்பரையில் யாருக்காவது மனப்பிரச்சினைகள் இருந்தாலோ, குறித்த நபரின் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ ஏற்படும். ஆழ்மனதில் உள்ள பயங்களை சுட்டிக்காட்டுபவையாக இக்கனவுகள் அமைகின்றன.

4.அடிக்கடி வரும் கனவுகள்(Recurring dreams)
இவை பெரும்பாலும் கொடுங்கனவுகளின் கருத்துருவையே கொண்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் இருக்கும். சில சமயங்களில் நல்ல கனவுகளாகவும் இருக்கும். இக்கனவுகள் வாழ்வில் சரி செய்யப்படாத சில பிரச்சினைகளால் வருகிறது. இப்பிரச்சினைகளுக்கு விடை கண்டு விட்டால் மீண்டும் வருவது நின்று விடலாம்.

5.எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள்(Epic dreams).
இக்கனவுகளின் போது ஒரு கோட்பாடாக மனது பல கருத்துக்களையும் நுன்காட்சிப்படிவுகளையும் பொருள் தரும்படியான திரை ஓட்டமாக மாற்றுகிறது. இதனால் எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

6.காவியக்கனவுகள்.
இவை மிகவும் அழகாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக்கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உன்மையிலேயே உள்ளது போல தோன்றும். இக்கனவு முடிந்து துயில் எழும் போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.

7.நோய் நீக்கும் கனவுகள்(Healing dreams).
இவ்வகை கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்மந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சிகளில் ஆஸ்த்துமா, ஒற்றைத்தலை வலி போன்ற நோய் உள்ளவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது எமது உடல், உயிர் மற்றும் மனம் என்பவை ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக்கொள்வதினால் இது சாத்தியமாகிறது என்கின்றனர்.
இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமன்றி அந்நோயை எவ்வாறு சரிசெய் யது என்று கூட ஆலோசனைகளை வழங்குவதுண்டு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

8.பொய்வழிக்கனவுகள்(False awaking dreams).
நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து வேலைக்கு செல்வது போல உணர்வோம். ஆனால் பிறகுதான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று. இதனைத்தான் False awaking dreams என்கின்றனர் அறிவியலாளர்கள்.

விழித்தாலும் விட்ட பாடில்லை கனவுகள்..
எது எப்படியோ கலர் கலராக கனவு காண்பதற்காகவே உறங்கிப்போக துடிக்கும் பொழுதுகள் கூட பிரியத்துக்குரியவை தான்..!

முற்றும்.

Mahi..✍?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction