free website hit counter

செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிநுட்பம் சாத்தியமா?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிலுள்ள தூசுகளை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் அங்கு தண்ணீரை மீளக் கொண்டு வர முடியும் என சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீங்கள் மனிதர்கள் சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர்த்து வேறு கிரகத்தில் குடியேற விரும்பினால் அதற்கு மிகக் குறைவான மோசமான தீர்வு செவ்வாய்க் கிரகம் எனலாம்.

 இத்தனைக்கும் செவ்வாய்க்கிரம் முழுமையாக பாலைவனங்களாலும் உலர்ந்து போன நதிப் படுக்கைகளாலும், வறண்ட நிலங்களாலும் பள்ளத்தாக்குகள் மற்றும் எரிமலைகளாலும் ஆன கிரகம் ஆகும்.

இந்நிலையில் பூமிக்கு ஒப்பாக செவ்வாய்க் கிரகத்தை மாற்றி அமைப்பதன் மூலம் அங்கு மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் முதற்கொண்டு ஹாலிவுட் திரைப் படங்கள் வரை பல விதங்களில் நாம் சிந்தித்து வருகின்றோம். முன்னதாக நாசாவின் Curiosity Rover செவ்வாயின் பாறை மாதிரிகளில் அங்கு முன்பு தண்ணீர் இருந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்திருந்த நிலையில் சமீபத்தில் இதற்கு நேரடி ஆதாரம் கிடைத்துள்ளது.

நாசாவின் MRO என்ற ஆர்பிட்டரின் SHARAD என்ற ரேடார் செவ்வாயில் பனி உறைந்துள்ள பகுதிகளுக்கு கீழே நீர் ஆதாரம் உள்ளது என்பதைத் தெளிவான செய்மதி படங்கள் மூலம் உறுதிப் படுத்தியுள்ளது. இந்நிலையில் செவ்வாயில் பூமிக்கு ஒப்பான வளி மண்டலத்தை உருவாக்க அங்கு மிக அதிகளவில் பச்சை வீட்டு விளைவு வாயுக்களை செலுத்துவதன் மூலம் வெப்பத்தை அதிகரித்தல் அல்லது துருவப் பகுதிகளில் அணுகுண்டுகளை வீசி உறைநிலை நீரை உருகச் செய்தல் என இரு மும்மொழிவுகள் உள்ளன.

இவற்றை விட மிக இலகுவான வழி ஒன்றும் Northwestern பல்கலைக்கழக மாணவியான சமநேஹ் அன்சாரி என்பவரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது செவ்வாயின் நிலப் பரப்பிலுள்ள மணல் தூசுகளை சரியாகக் கையாண்டு பம்ப் செய்வதன் மூலம் வளிமண்டல வெப்ப நிலையை அதிகரித்து குறைந்தது கோடை காலத்தில் நிலத்தடி நீரை உருக வைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தூசுத் துகள்கள் ஒவ்வொன்றும் 1 மீட்டரில் 9 மில்லியன் பங்கு சிறிய மெட்டல் பதார்த்ததால் ஆனது. எனவே இவற்றை பம்ப் செயும் போது அவை இலகுவாக செவ்வாயின் ஈர்ப்பைத் தாண்டி விண்வெளிக்கு வரக் கூடும் என்பதால் அதைத் தவிர்க்கும அளவு கோலில் இச்செய்முறை நிகழ்த்தப் பட வேண்டும். இதன் போது சில தசாப்தங்களில் 30 லீட்டர் துகள்கள் செவ்வாயின் சராசரி வெப்ப நிலையை 30 பாகை C ஆக வைத்திருக்கும்.

அன்சாரியின் இந்த முறை மற்ற முறைகளை விட 5000 மடங்கு வலுவானது என்று 
அவர் கூறுகின்றார். இவரது இந்த முன்மொழிவு சமீபத்தில் விஞ்ஞான இதழ்களில் வெளியாகியுள்ளது.

தகவல் - The Economist

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula