free website hit counter

சூரிய ஒளி உதவி இன்றி பூமியில் ஆக்சிஜன் உருவாக முடியுமா? - இருண்ட ஆக்சிஜன் என்றால் என்ன?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்தில் காணப் படும் polymetallic Nodules என்ற நிக்கல், கோபால்ட், கொப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற மூலகங்களால் ஆன உலோகப் படுக்கைகளில் இருந்து சூரிய ஒளி உதவி இல்லாமலேயே ஆக்சிஜன் உற்பத்தியாவது சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது.

2013 ஆமாண்டு முதலில் அறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு சமீபத்தில் Nature Geo Science பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. இத்தகவலை Andrew Sweet Man என்ற ஸ்காட்டிஷ் சமுத்திரவியல் அறிஞர் உறுதிப் படுத்தியுள்ளார்.

எமது பூமியில் பெரும்பாலான ஆக்சிஜன் Photo Synthesis எனப்படும பச்சை வீட்டு விளைவு காரணமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. அதாவது பூமியை வந்தடையும் சூரிய ஒளிக் கதிர்களுடன் தண்ணீர் மூலக்கூறுகளும் கார்பன் டை ஆக்சைடும் எதிர்வினை ஆற்றி சுகரை உருவாகும் போது ஆக்சிஜன் வெளிப்படுகிறது.

ஆனால் பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் உருவாக முன்பே கடற்படுக்கை மேற்பரப்பில் உள்ள உலோக மூலக தாதுக்களில் இருந்து ஆக்சிஜன் மூலக்கூறுகள் வெளிப்பட்ட ஆதாரம் கிடைத்திருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தியுள்ளது.

மேலும் இக்கண்டுபிடிப்பு சமுத்திரங்களின் அடியில் தான் பூமியில் முதலில் நுண்ணுயிர்கள் தோன்றின என்ற கருத்துக்கும் வலுச்சேர்க்கின்றது. இச்செயற்பாடு எவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடும்?

அதாவது குறித்த உலோகத் தாதுக்கள் வெளிப்படுத்தும் மின் புலம் (electric field) தண்ணீர் மூலக்கூறுகளுடன் தாக்கமுறும் போது அதில் கலந்திருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளை விடுவிப்பதாக விளக்கப் படுகிறது. இது ஒரு அயன் தாக்க விளைவு ஆகும்.

இது தவிர இந்த Dark Oxygen இன்னமும் சமுத்திரங்களுக்கு மிக ஆழத்தில் சூரிய ஒளி நுழைய முடியாத பிரதேசங்களிலும் microbes என்னும் நுண்ணுயிர்கள், அவற்றை உணவாக எடுக்கும் ஏனைய உயிர் வாழிகளின் வாழ்வாதாரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனால் மனித இனத்தின் சொந்த நோக்கங்களுக்காக இந்த கடற்படுக்கை உலோக முத்துக்களை அதிகம் அகழ்வது குறித்த உயிரினங்களின் அழிவுக்கே வழி வகுக்கும் என்பதும் கவனிக்கத் தக்கதே..

தகவல் - The Economist

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula