free website hit counter

பூமிக்கு கிடைக்கப்போகும் "குட்டி நிலா!"

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பூமி தற்காலிகமாக ஒரு "குட்டி நிலவை" பெறப்போகிறது என்றும் அது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது கிரகத்தை சுற்றி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 4 பில்லியன் ஆண்டுகளில், பூமியை இணைத்து சுற்றி வருகிறது சந்திரன். ஆனால் பிற சந்தர்ப்பங்களில் பூமியின் ஈர்ப்பு விசையால் விண் பொருட்கள் சுற்றுப்பாதையில் வந்து சென்றிருக்கின்றன. அவ்வகையிலே தற்போது இந்த குட்டி நிலாவும் வட்டமிடவுள்ளது. 

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் 2024 PT5 என அழைக்கப்படும் ஒரு சிறு பொருள் (குட்டி நிலா) அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது கிரகம் பெறவுள்ளது.

வரவிருக்கும் குட்டி நிலவு நமது கிரகத்திற்கு அருகில் சூரியனைச் சுற்றி வரும் பாறைகளின் குழுவான அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. ஆகஸ்டு, 2024 இல் Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட PT5 ஆனது வெறும் 33 அடி (10 மீட்டர்) அகலம் கொண்டது. மேலும் செப்டம்பர் 29 மற்றும் நவம்பர் 25 க்கு இடையில் நமது பூமியின் ஒரு முழுமையான சுற்றுப்பாதையை இது உருவாக்கும்.

அரிதாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டில், 2022 NX 1 என்று அறியப்பட்ட ஒரு பொருளும் நமது கிரகத்தின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, சிறிது நேரம் நம்மைச் சுற்றி வந்தது குறிப்பிடதக்கது.

இத்தகவல் சுவாரஸ்யமாக இருந்தாலும், விண்வெளி ஆர்வலர்களுக்கு இதைப் பின்பற்றுவது எளிதாக இருக்காது. வழக்கமான தொலைநோக்கிகளால் இதனை காண்பது என்பது இயலாது என்றும் அக்கோள் மிகவும் சிறியதும் மங்கலானதும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த குட்டி நிலா தொழில்முறை வானியலாளர்களால் பயன்படுத்தப்படும் வழக்கமான தொலைநோக்கிகளின் பிரகாச வரம்பிற்குள் வர வாய்ப்பு உள்ளது.

- mymodernmet

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction