free website hit counter

 தக் லைஃப் (Thug Life) - விமர்சனம்.

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீண்ட நாட்களின் பின் ஒரு தமிழ்திரைப்படத்தின் பல பாடல்கள் நன்றாக அமைந்து, ஒரு நல்ல இசை தொகுப்பாக வந்திருப்பது 'தக் லைப்' படத்தின் பாடல்கள்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் பின்னதாக, பாடல்கள் படத்தின் மீதான பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திருந்தன. 

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒவ்வொரு பாடலும் இசை ஜாலம் நிகழ்த்தின என்பது உண்மைதான். சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை,  "முத்தமழை"  பாடலைச் சிறப்பாகப் பாடியது சின்மயியா, தீயா எனப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படத்தின் பாடல்களில் முதலிடம் " விண்வெளி நாயகா " தான். ஸ்ருதிஹாசன் இசைப்பாடகியாகத் தொடங்கிய தன் பயணத்தை, நடிகையாக மாற்றாமலிருந்திருந்தால், இசை நிகழ்ச்சிகளில் அவர் தொட்டிருக்கக் கூடிய உயரம் அசாத்தியமானது என்பதை இந்தப் பாடலில் நிரூபித்திருக்கின்றார்.

படத்தில் முக்கியமான ஒரு பாடலாக அமைவது " அஞ்சு வண்ணப்பூவே..". பாம்பே ஜெயஶ்ரீ , 'லைவ் ஒப் பை (Life of Pi) படத்தில் பாடியிருந்த தாலாட்டுப்பாடல் போன்ற இப்பாடலுக்கு பாடகி சாருலதா மணியின் கனத்த குரலும், பாவமும் மெருகூட்டியிருக்கின்றன.  கார்த்திக் நேத்தாவின் வரிகள் வலிமை சேர்க்கின்றன. படத்தின் ஆரம்பக் காட்சியொன்றிலேயே இப்பாடல் ஒலிக்கத் தொடங்கையில் எதிர்பார்ப்பு எழுகிறது. ஆனால்..

சின்மயின் இசை ஜாலத்தால் பிரபலமாகிவிட்ட "முத்தமழை..." இளம் சொல்லிசைப் பாடகன் பால்டப்பாவின் " மாறா.." என்பவையும் இந்த இசைத் தொகுப்பில் சிறப்பான பாடல்கள்தான். இந்தப் பாடல்களின் இசையனுபவத்தை இரசிக்க விரும்பின், இப்பாடல்களைப் படக் காட்சிகளுடன் காணாதிருப்பதே மேல்.இத்தனை சிறப்பான பாடல்களைத் தந்த ஏ.ஆர்.ரகுமான், கமல், சிம்பு, த்ரிஷா, மணிரத்தினம் என எல்லோரும் சேர்ந்து,இந்த நல்ல இசையனுபவத்தை சிதைச்சுச் சிறுமைப்படுத்தி விட்டார்கள். 

ரொட்டியை திருப்பிப் போட்டுச் சுட்டுவிட்டால் தோசை என்றாகிவிடுமா? முன்னவர்களின் திறமைகள் மீதான நம்பிக்கையோடு வரும் இளையவர்களை முன்னகர்த்துகின்றோம் எனச் சொல்லி,திசை திருப்பி விடுகின்றார்கள் இப் பெரியவர்கள்.  அவர்களை நீங்கள் சீண்டாமல் விட்டாலே,  ' அயோத்தி ' 'டூரிஸ்ட் பேமிலி' எனச் சின்னபடங்கள் எடுத்து, சீரிய சிந்தனைகளையும், மனிதநேயத்தினையும் தமிழ் சினிமாவையும், வளர்த்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளித் 'தக்லைப்' ஆகின்றீர்கள். உங்களிடமிருந்து தப்பிக்க வேண்டியது தமிழ் சினிமாவும், இளைய தலைமுறையும். இனி இதற்கும் மாஸ்டர் கிளாஸ் விளக்க வகுப்புக்கள் எடுக்க வராதீர்கள். போதும் விட்டு விடுங்கள்.... ('சுபம்' போட ) முடியல்ல...

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: