free website hit counter

கொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம்? : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

நெடுநீளத் திரைப்படங்களும் பரிசில்களுக்கு தெரிவாகின. ஆனால் முற்றுப் பெறாத, முற்றுப் பெறும் தருவாயில் கொரோனா தாக்கத்தால் நிதியுதவி இல்லாது புரொடக்‌ஷன் வேலைகள் நிறுத்தப்பட்ட திரைப்படங்களே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களை முழுமையாக்க நிதியுதவியாக பரிசுத் தொகை கொடுக்கபப்ட்டது.

இதில் 70000 சுவிஸ் பிராங்குகள் நிதியுதவி பரிசுத் தொகையை வென்றது Chocobar எனும் திரைப்படத் திட்டம். The Films After Tomorrow பிரிவில் போட்டியிட்ட திரைப்படங்களில் இத்திரைப்படம் வென்றது. Lucrecia Martel இயக்கி வரும் இம்முழு நீளத் திரைப்படம், ஒரு ஆர்ஜெண்டீனிய ஆவணத் திரைப்படம். 2000ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட Javier Chocobar எனும் புரட்சியாளர் பற்றிய திரைப்படம் அது. அவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் கூட இருக்கின்றன. ஆனால் அவர் கதை அதிகமானோருக்கு தெரியாது. ஆகையால் அதை ஆவணத் திரைப்படமாக்க முயற்சித்திருகிறார் Lucrecia எனும் பெண் இயக்குனர்.

சிறந்த நடுவர் தெரிவு திரைப்படமாக 50’000 சுவிஸ் பிராங்குகளை தட்டிச் சென்றது Muguel Gomes இயக்கத்தில் உருவாகி வரும் Selvajaria. போர்த்துக்கல், பிரான்ஸ், பிரேசில், சீனா, கிரீஸ் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் ஆர்ஜெண்டீனாவை கதைக்களமாக கொண்ட ஒரு திரைப்படம்.

இம்முறை விழாவில் குறுந்திரைப்படங்கள் மாத்திரமே போட்டிப் பிரிவில் கலந்து கொண்டு பரிசுக்களை பெற்றுச் சென்றன.

சிறந்த தேசிய குறுந்திரைப்படமாக « People on Saturday »

குறுந்திரைப்பட பிரிவில் தேசியப் பிரிவில் சிறந்த சுவிற்சலாந்து திரைப்படமாக « People on Saturday » எனும் குறுந்திரைப்படம் தெரிவானது. ஒரு கோடை சனிக்கிழமை ஒன்றில் சூரிச்சை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளில் 10 இடங்களில் நடைபெறும் தினசரி பிரச்சினைகளை ஒட்டிய குறுந்திரைப்படம். ஒரு பேருந்து நிலையத்தில் அயர்ந்து நித்திரை கொள்ளும் ஒரு வர்த்தகர், வாகன பார்க்கிங் கட்டிடம் ஒன்றில் டிராஃபிக்கில் சிக்கிண்டு, ஹோர்ன் அடித்தபடி நிற்கும் வாகனங்கள், வாகன கடவை ஒன்றில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பாதசாரிகள், ஆனால் அனைவரும் ஸ்மார்ட் தொலைபேசி ஸ்கிரீனுடன் இணைத்து, பச்சை விளக்கு எரிகிறதா இல்லையா என்றே தெரியாது நிற்கும் பாதசாரிகள். ஒரு கஃபே குடிக்கும் கடை. இரு காதுகேளாத ஜோடியினர் தமக்குள் கைமொழியால் பேசிக் கொள்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் கஃபேயில் அவரவர் பாட்டுக்கு கதைத்துக்கொண்டும், பத்திரிகை வாசித்துக் கொண்டும், இருக்கின்றனர். ஒரு வாகன விபத்து நடக்கும் சத்தம் கேட்கிறது. அனைவரும் அத்திசை நோக்கி திரும்புகின்றனர். அந்த ஜோடி மாத்திரம் தொடர்ந்து கைமொழியில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் பெரும்பாலானவை நாம் ஒரு நாளில் நாம் என் கண்ணால் பார்க்கக் கூடிய சாதாரணக் காட்சிகள் தான். அவறை மிக நேர்த்தியான படப்பிடிப்பால், இதில் யார் நடிகர்கள், யார் காட்சிக்குள் உண்மையாக வந்து செல்லும் figurants என இலகுவாக அடையாளம் காண முடியாத படி நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் Jonar Ulrich.

சிறந்த நடுவர் தெரிவில் சுவிஸ்ஸ் நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலத் திரைப்படமான Trou Noir தெரிவானது. ஸ்கேட் போட் ஓட்டும் ஒரு பதின்ம வயது இளைஞர் எப்போதும் தனது நண்பர்களுடன் பதின்ம வயது ஷேஷ்டைகள், குறும்புகளுடன் காலத்தை ஓட்டுகிறார். திடீரென மேல் படிப்புக்கு வேறு இடம் கிடைத்து போக வேண்டிய நிர்ப்பந்தம். எப்படி எங்கு செல்கிறோம் என்றே தெரியாத ஒரு புதிய உலகுக்கு செல்வதை, நண்பர்களை விட்டு பிரிவதை நினைத்து ஏற்படும், பயம். தனிமையில் சுற்றித் திரிகிறார். ஒரு கைவிடப்பட்ட பாதுகாப்பற்ற குழிக்குள் விழுந்து கிடக்கும் ஒரு நாயை ஒரு நள்ளிரவில் காப்பாற்றுவதன் மூலம் அந்த பயத்தை எதிர்கொள்கிறார்.

சிறந்த சர்வதேச குறுந்திரைப்படமாக I ran from it and was still in it எனும் கறுப்பு வெள்ளை அமெரிக்க திரைப்படம் தெரிவானது. ஒரு குடும்பத்திடமிருந்து பிரிவு, உறவைத் தொலைத்தல் என்பவற்றை, தற்செயலாக கண்டெடுத்த found footages ஊடாக சொல்கிறார் இயக்குனர். மிகச் சிக்கலான உறவு முறை அனைத்தையும் found footages இன் ஊடாகவே சொல்ல விளைகிறார் இயக்குனர் Darol Olu Kae.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction