லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.
சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் இசைப்பிரபலமாக இருக்கும் Lenny, தனது கிறிஸ்தவ அடையாளத்தை அழித்து, இஸ்லாமியராக காட்டிக் கொண்டால் மாத்திரமே தொடர்ந்து அந்நாட்டின் இசையுலகில் தக்கணப் பிழைக்க முடியும். என்ன செய்கிறார் என்பதே கதை.
ஒருவரின் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு Hamza Bangash இயக்கியுள்ள இக்குறுந்திரைப்படத்தின் காட்சி வடிவமைப்பு, இசைக் கோர்ப்பு, ஒலிச் சேர்க்கை, தாபாத்திரங்களின் சிகை அலங்காரம் அனைத்தும், 70 களில், கமல், ரஜினியின் பட உலகத்தை நம்மவருக்கு ஞாபகப்படுத்தலாம். ஆனால் எங்கும், எப்போதும் ஒரு சிறுபான்மை இனத்தம், ஒரு பாரிய அரசியல் மாற்றத்தில் அடிபட்டு போகும் போது, அதன் கலைஞர்களும் எந்தளவு அடிபட்டுப் போகிறார்கள் என மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இந்த குறுந்திரைப்படத்தில் காண்பிக்கிறார் Hamza.
லொகார்னோவின் குறுந்திரைப்பட போட்டிகளில் எப்போதும், வாழ்க்கையின் சிறுகல் குழப்பங்களையும், மிக பூதாகரமாக காட்டி வடிவமைக்கும் பல மேற்குலக குறுந்திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். குடி, போதை, காமம் என பல பிரச்சினைகளை காண்பிப்பார்கள. இக்குறுந்திரைப்படத்திலும் அவை உண்டு. ஆனால் அதற்கும் மேல் இங்கு காட்டப்படுவது ஒரு இனத்தின் அடையாளம் ஒடுக்கப்படும் போது அதன் விளைவு…..
படத்தை நீங்கள் நேரடியாக இந்த இணைப்பில் ஆகஸ்டு 15ம் திகதிக்குள் பார்வையிடலாம்.
https://www.locarnofestival.ch/LFF/locarno-2020/film/1978?fid=1172000&l=en