free website hit counter

59வது சொலதூர்ன் திரைப்பட விழாவில் நம்மவர் படம் 'Le Gap'

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சொலதூர்ன் திரைப்படவிழா (Solothurner Filmtage) சுவிற்சர்லாந்தின், தொன்மையான, மற்றும் புகழ்பெற்ற  திரைவிழாக்களில் ஒன்றாகக் கடந்த 58 வருடங்களாகத் தொடர்ந்து  நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் 59வது பதிப்பில் நம்மவர் படைப்பும் பங்கேற்கிறது. சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்களின் மையப்புள்ளியில் இருக்கும் சொலதூர்ன் நகரில் நடைபெறுவதால், இதன் பார்வையாளர்கள் அதிகமானோர் பிரெஞ்சு/ஜேர்மன் மொழிகள் பேசுபவர்களாக இருப்பர். 

வருடந்தோறும் சுவிஸ் சினிமா படைப்புக்களை ஊக்குவிதற்காக உருவாக்கப்பட்ட இத்திரைப்படவிழாவில்,  150க்கு மேற்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான திரைப்படங்கள் சுவிஸில் உருவாக்கப்பட்ட முழு நீள மற்றும் குறுநிதிரைப்படங்களாக இருப்பவை. அல்லது சுவிஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஐரோப்பிய திரைப்படங்களாக இருக்கும்.

இவ்விழாவையொட்டியே சுவிஸ் சினிமா விருதுகளுக்குப்  பரிந்துரைக்கப்படும்  திரைப்படங்கள் அறிவிக்கப்படுவதால், சுவிஸ் சினிமா அகடமியில் இருக்கும் பல அங்கத்தவர்கள் இங்கு வருகை தருவர். இதன் உயரிய விருது Prix du Soleure என அழைக்கபடுகிறது. மனித காருண்யம் பேசும், மிகச் சக்திய்வாந்த காட்சியமைப்புக்களுடைய எந்த திரைப்படமும் இவ்விருதை வெல்லமுடியும்.

வருடந்தோறும் சுமார் 65000 க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இம்முறை ஜனவரி 17ந் திகதி முதல் 25 திகதி வரை நடைபெறுகிறது. திரைப்படவிழாக்களில் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக செங்கம்பளங்கள் விரிக்கப்படுவதில்லை. மாறாக சினிமா பிரபலங்கள் பலர் மக்களோடு மக்களாக எல்ல நிகழ்வுகளிலும் கலந்திருப்பதைக் காண முடிவது இத்திரைப்படவிழாவின் மற்றுமொரு தனித்துவம்.

சுவிற்சர்லாந்து லுசான் சர்வகலாசாலையில்  சினிமா உருவாக்கப் பட்டயப் படிப்பினை நிறைவு செய்த  கீர்த்திகன் சிவகுமாரின் Keerthigan Sivakumar உருவாக்கத்தில் "Doosra" குறுந்திரைப்படம் சென்ற ஆண்டு, ஐரோப்பிய நாடுகளில நடைபெற்ற பல சர்வதேச திரைப் படவிழாக்களில்  விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றிருந்தது.

அவரது அடுத்த  படைப்பாக "Le Gap - இடைவெளி " குறுந்திரைப்படத்தினை, சுவிஸ் நடுவன் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் சினிமாசார் நிதி உதவிகளுடன், லுசான் மாநிலத்தைச் சேர்ந்த Box நிறுவனம் தயாரித்துள்ளது. புலம்பெயர் சமூகங்களின் பிரச்சினைகளை ஒட்டிய இந்த குறுந்திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்ற மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அதன் அனைத்துத் தொழில் நுட்பவேலைகளும் முடிந்த நிலையில், சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலோர்த்தூன் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்பினை அழுத்தி விபரங்கள் காணலாம்

‘Le Gap’ a short film that represent our Tamil young director in the 59th Solothurn International Film festival The Solothurn Film Festival (Solothurner Filmtage) in Switzerland has been a prestigious and acclaimed film festival for the past 58 years, known for its richness and recognition. The 59th edition taking place this year, our film will be participating.

Given that Solothurn is in the multilingual cantons of French and German-speaking regions in Switzerland, the audience is likely to include those proficient in French and German languages. In this film festival, which is annually dedicated to showcasing Swiss cinema, over 150 films are being screened. The majority of these films are either full-length features or short films produced within Switzerland. Alternatively, some may be collaborations between Swiss production companies and European filmmakers. Given that films recommended for Swiss cinema awards are featured in this festival, several notable figures from the Swiss cinema industry associated with the Swiss Film Academy are likely to attend.

The prestigious award at this festival is called Prix du Soleure, and any film demonstrating impactful storytelling and powerful cinematic representation has the potential to win this esteemed accolade. Approximately 65,000 attendees are expected this year, from January 17th to 25th. Unlike traditional awards ceremonies, there are no red carpet events honoring celebrities; instead, cinema luminaries engage with the public, fostering a unique sense of community throughout the festival, setting it apart from other film events.

Keerthigan Sivakumar had completed his studies in film making at the Lucerne University of Applied Sciences and Arts in Switzerland. His short film ‘Doosra’ received awards and recognitions at various international film festivals in European countries last year. His work has gained acclaim, earning both accolades and applause at many festivals. His next work is the short film "Le Gap" produced by the Box company from Lausanne, with the support of the Swiss central government and the state government. The shooting of this short film on the issues of diaspora communities took place last March. It is noteworthy that after all its technical work has been completed, it has been chosen to participate in the Solothurn Film Festival, one of Switzerland's major film festivals.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction