free website hit counter

59 வது சொலொத்தூண் திரைப்படவிழா ஆரம்பமானது !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மன் மொழியில், Solothurner Tage, எனவும், Journées de Soleure எனப் பிரெஞ் மொழியிலும், Giornate di Soletta என இத்தாலிய மொழியிலும் அழைக்கப்படும், சொலொத்தூண் நாட்கள் எனும் தலைப்பிலான சொலொத்தூண் திரைப்பட விழாவின் 59வது பதிப்பு நேற்று (17.01.24 )மாலை 6.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பகியது.

சுமார் 900 சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், கௌரவ விருந்தினராக  மாநிலங்கள் அவைத் தலைவர் ஈவா ஹெர்சாக் Eva Herzog கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவர் தனது தொடக்க உரையில், " திரைப்படங்களை ஒன்றாகப் பார்ப்பது மற்றும் விவாதிப்பது எப்படி என்பதை இங்கே ஏறக்குறைய  60 ஆண்டுகளாக, நாம் இங்கே செய்து வருகின்றோம்.  சோலோதர்ன் டேஸ் நல்ல மாற்றங்களைத் தேடுவதற்கு உதவுகிறது. நமது சமூகத்தில் மாற்றங்கள் மற்றும் எழுச்சிகள், நமது கவலைகள், எங்கள் அச்சங்கள், எங்கள் மகிழ்ச்சிகள். என எல்லாவற்றையும், ஜனரஞ்சக சிந்தனையுடன் பரிமாறிக்கொள்ள சோலோதர்ன் போன்ற இடங்கள் அவசியம் " என்றார்.

வரும் 24ந் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், இன்று வியாழன் முதல், பல்வேறு   வகைகளை சேர்ந்த மொத்தம் 176 படங்கள்,  நகரிலுள்ள பத்து திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 23 உலக பிரீமியர்களும் 13 உள்ளக பிரீமியர்களும் அடங்கும். "திரைப்படங்கள் நமது தேசிய எல்லைகளுக்கு அப்பால் நமது சமூகத்தின் நிலையை ஆராய்கின்றன. அவற்றின்  கருப்பொருள்களைப் பாருங்கள்" என இத்திரைப்படவிழாவின் கலை இயக்குனர் நிக்கோலோ காஸ்டெல்லி தனது உரையில் குறிப்பிட்டார். 

விழாவின் தொடக்கத் திரைப்படமாக கார்மென் ஜாக்கியர் மற்றும் ஜான் காஸ்மேன் ஆகியோரின் இணை இயக்கத்தில் (Carmen Jaquier et Jan Gassmann) உருவான,  "லெஸ் பாரடைஸ் டி டயான்"  (Les paradis de Diane) திரையிடப்பட்டது.  

மேலதிக படங்கள் : நன்றி - Solothurner Filmtage | by module+ 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction