free website hit counter

சொலொத்தூன் திரைப்படவிழாவில் போட்டியிடும் முதல் தமிழ் படம் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனவரி 17ந் திகதி முதல் 25 திகதி வரை சுவிற்சர்லாந்தில் நடைபெறுகிறது சொவோத்தூர்ன் சர்வதேச திரைப்படவிழாவின்59வது பதிப்பு .

இத் திரைப்படவிழாவில், நம்மவர் படைப்பு, சொலோத்தூன் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் முதலாவசது தமிழ் படைப்பு எனும் சிற்ப்போடு குறும்படப் போட்டிப்பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியுள்ள குறும்படம் "Le Gap - இடைவெளி". 

இக் குறும்படத்தின் இயக்குனரான, சுவிற்சர்லாந்து லுசான் சர்வகலாசாலையில்  சினிமா உருவாக்கப் பட்டயப் படிப்பினை நிறைவு செய்த  கீர்த்திகன் சிவகுமாரின் Keerthigan Sivakumar உருவாக்கத்தில் "Doosra" குறுந்திரைப்படம் 2022 ஆண்டு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல சர்வதேச திரைப் படவிழாக்களில்  விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றிருந்தமையை நாம் முன்னரே பதிவு செய்திருந்தோம். 

அவரது அடுத்த  படைப்பாக "Le Gap - இடைவெளி " குறுந்திரைப்படத்தினை, சுவிஸ் நடுவன் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் சினிமாசார் நிதி உதவிகளுடன், லுசான் மாநிலத்தைச் சேர்ந்த Box நிறுவனம் தயாரித்துள்ளது. புலம்பெயர் சமூகங்களின் பிரச்சினைகளை ஒட்டிய இந்த குறுந்திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்ற மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அதன் அனைத்துத் தொழில் நுட்பவேலைகளும் முடிந்த நிலையில், சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலோர்த்தூன் திரைப்பட விழாவில், முதற் திரையிடல் எனும் சிறப்போடு போட்டியிடத்  தெரிவாகியுள்ளது.

"Le Gap - இடைவெளி" புலம்பெயர் தேசத்தில் நம் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் அசாதாரண சூழ்நிலையொன்றினையும், அதனால் ஏற்படக் கடிய உளநிலைப் பிறழ்வுகளையும், மையப்படுத்திய கதை. அது நிறைவான சினிமா அழகியலோடு திரையில் தோன்றவுள்ளது. அவரது முதலாது படத்திற்கு அமைந்தது போலவே சிறந்த கலைஞர்கள் இப்படத்திற்கும் அமைந்திருக்கின்றார்கள். 'எனை நோக்கிப் பாயும்  தோட்டா' திரைப்படத்திற்கு இசையமைத்த தார்புகா சிவா இந்தப் படத்திற்கான இசையினை வழங்கியுள்ளார்.

படத்தின் முக்கிய பகுதியில் வரும் நடனத்தை, ஐரோப்பாவிலும், தமிழகத்திலும் நல்லதொரு கலைஞராக அறியப்பட்டு வரும், உஷா வடிவமைத்துள்ளார். இத்தகைய சிறப்பான கலைஞர்களின் பங்களிப்புடன், ஒரு ரயில்பயணத்தின் கதைக்களமாயினும், பார்வையாளனை பல்வேறு காட்சிகளுக்குள் பயணிக்க வைக்கும் கச்சிதமான திரைக்கதைப் புனைவு ஒரு முழுநீளத் திரைப்படத்தினைப் பாரக்கும் அனுபவத்தைப் பதினைந்து நிமிடங்களுக்குள் தந்துவிடுகிறது.

பயணிகள் ரயிலொன்றை வாடகைக்கு அமர்த்தி, அதிலே கச்சிதமாக  ஒரு பெருந்திரைக்கான காட்சிப்படுத்தல்களோடும், இசை, நடனம், என்பவற்றுடனும் அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ள 
"Le Gap - இடைவெளி" பார்வையாளர்களைக் கவரும் என்பதுடன் மட்டுமன்றி, அது பேசும் கருப்பொருள் பலமான சிந்தனையைத் தோற்றுவிக்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஜனவரி 20 மற்றும் 23 ந்திகதி என இரு காட்சிப்படுதல்களுக்கு தெரிவாகியுள்ள "Le Gap - இடைவெளி"  சுவிற்சர்லாந்தில் வாழக் கூடிய எமது மக்கள், குறிப்பாக இரண்டாந் தலைமுறை இளையவர்கள், கூடியவரை தவறாது பார்ப்பது ஒரு நல்ல சினிமா அனுபவத்தைறுவதுடன், புலம்பெயர்ந்த தேசத்தில் சாதிக்க முனையும் இளைஞர்களுக்கான ஆதரவாகவும் இருக்கும்.  இக்காட்சிகளுக்கான ஆசனப்பதிவுகள் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது. பார்க்கவிரும்புவர்கள் முற்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. ஆசனப் பதிவுகளை, சொலோத்தூன் திரைப்படவிழா இணையத்தளத்தில் செய்து கொள்ளலாம்.

இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே 

https://www.solothurnerfilmtage.ch/fr/festival/programme/courts-iii       

சொலொர்த்தூண் திரைப்படவிழாவின் சிறப்புக்குறித்த விபரங்களை கீழ் வரும் இணைப்பில் காணலாம்.

https://www.4tamilmedia.com/menu-cinema/film-festivals/le-gap-at-59th-solathurn-film-festival

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction