free website hit counter

'Le Gap - இடைவெளி ' சிறப்பான முயற்சி : இயக்குனர் ரமணன்

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்து சொலோத்தூன் திரைப்படவிழாவின் 59 வது பதிப்பில், 20.01.24 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு, சொலோத்தூன் Canva திரையரங்கில்  குறும்படப்பிரிவில் போட்டியிடும் ஏனைய 5 படங்களுடன், பார்வையாளர்களுக்கான முதற் திரையிடலில் காட்சிப்படுத்தப்பட்டது.  காலைக்காட்சியாக இருந்த போதும், பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இத் திரைப்பட விழாவில் குறும்படப் பிரிவில், நான் குழுவாக போட்டியிடும் சுமார் 22 படங்களில் ஒன்றான, 'Le Gap' படத்தின் முதல் திரையிடலில், படத்தினைப் பாரத்து ரசித்த,  சுவிற்சர்லாந்தின் முதல் முழு நீளத் திரைப்படமான " பூப்பெய்தும் காலம் திரைபடத்தை இயக்கியவரும், " மாறுதடம் " எனும், திரைப்படத்தை இயக்கியதன் மூலம், தாயகத்திலும்  நன்கு அறியப்பட்ட, சுவிஸ் இயக்குனரும், கூத்துப்பட்டறைக் கலைஞருமான, இயக்குனர் ரமணனன் படத்தின் சிறப்பான படைப்பாக்கத்தையும், பங்கு கொண்ட கலைஞர்களையும் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இத் திரைப்படவிழாவில், Le Gap  படத்தின் மறு காட்சிக்கான் விபரங்கள் காண்பதற்கான இணைப்பு : https://www.solothurnerfilmtage.ch/fr/festival/programme/kurzfilme-iii-besonders-sein

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction