free website hit counter

மோகன்லால் படம் பார்க்க தடுப்பூசி அவசியம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறந்த காதல் படங்களை எடுத்தவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவருக்கும் நடிகை லிஸிக்கும் பிறந்தவரான கல்யாணி தற்போது தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் படங்கள் இயக்குவதை கடந்த 10 ஆண்டுகளாக குறைத்துக்கொண்ட நிலையில், மோகன்லாலை வைத்து ‘மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்’

என்கிற வரலாற்று மலையாளப் படத்தை 2019-இல் எடுத்து முடித்தார். இதில் மோகன்லாலுடன் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய சினிமாவின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துமுடித்தனர். ஆனால், படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே தேசிய விருதுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

படக்குழுவின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டதுடன் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் 2020, மார்ச் 26 அன்று வெளியாகவிருந்தது. எனினும் கொரோனா முதல் அலை பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிக்கவே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

தற்போது கேராளவில் ஜூலை 15-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதுடன் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டு தவனையும் செலுத்திக்கொண்டவர்கள். கொரோனா வந்து 90 நாட்களைக் கடந்தவர்களை மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்போதாக கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ‘மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஓணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக வரும் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என மோகன்லால் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மோகன்லால் படம் பார்க்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என இதை வேடிக்கையாக பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction