free website hit counter

ஓடிடியில் வெளியாகிறது ‘மேதகு’ திரைப்படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ‘மேதகு’ எனும் தமிழ் திரைப்படம் வருகின்ற ஜூன்-25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 12:35 மணிக்கு BSvalue OTT என்ற ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தியப் பணத்துக்கு ரூபாய் 70 செலுத்தியும் 5 அமெரிக்க டாலர்கள் செலுத்தியும் ‘பே பெர் வியூ’ என்ற முறையில் படத்தைக் காணலாம்.

கிட்டு எனும் புதுமுகப் படைப்பாளி, போதிய ஆராய்சித் தரவுகளின் அடிப்படையில் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, தமிழ் ஈழ திரைக்களம் என்ற பதாகையின் கீழ் ரியாஸ் தயாரித்துள்ளார். பிரவீன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே படம் முடிவுபெற்றுள்ள கடந்த நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது போலவே தற்போது திரையரங்குகள் இயங்காத நிலையில் ஓடிடியில் வெளியாகிறது. இதை இயக்குநர் சேரன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction